இந்திய அரசின் பெயரில் ஆன்டி வைரஸ் சாஃப்ட்வேர் | உண்மையா ?

பரவிய செய்தி

அன்புள்ள வாடிக்கையாளர்களே ! அரசின் சைபர் ஸ்வச்த ப்ராஜெக்ட் படி, உங்களின் டிவைஸ் போட்நெட் மால்வர் ஆல் பாதிக்கப்பட்டு இருக்கலாம். அதனை மாற்றுவதற்கு http://www.cyberswachhtakendra.gov.in தளத்திற்கு தயவு செய்து செல்லவும்.

மதிப்பீடு

சுருக்கம்

மால்வர் தாக்குதலில் இருந்து நாட்டில் உள்ள மக்களின் டிவைஸ்-களை பாதுகாத்து கொள்ள அரசானது இலவசமாக ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேரை அறிமுகம் செய்து உள்ளதாக 2017-ல் செய்திகளில் வெளியாகி உள்ளது.

விளக்கம்

செல்போன் உள்ளிட்ட டிவைஸ்களின் பயன்பாடு அதிகரித்தது போன்று சைபர் அட்டாக் போன்றவையும் அதிகரித்து வருகிறது. வைரஸ் தாக்குதல் அதிகரிப்பதால் ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவும், மிரட்டப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில், ” As per government of India’s Cyber Swachhta project, your device is probably infected with botnet malware. Please visit http://www.cyberswachhtakendra.gov.in for remediation ” என்ற வாக்கியத்தில் லிங்க் உடன் இணைக்கப்பட்ட மெசேஜ் சிலருக்கு வரலாம். இதைப் பற்றி கேள்விகளும் கேட்கப்பட்டன.

Advertisement

2017 ஆம் ஆண்டில் இந்திய யூனியன் அரசின் சார்பில் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(CERT) மூலம்Cyber Swachhta kendra ” அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற 2017 ஆம் ஆண்டில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இதன் எச்சரிக்கை மெசேஜ் வந்து இருந்ததாக 2018 ஜனவரியில் எகானாமிக் டைம்ஸ் தெரிவித்து இருந்தது.

அரசின் மதிப்பீட்டின் படி, Cyber Swachhta kendra தொடங்கிய பிறகு நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நெட்வொர்களிலும் 51% மால்வர் பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவித்து இருந்தனர். கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(CERT) மூலம் இயக்கப்படும் மையத்தால், நாடு முழுவதும் உள்ள இன்டர்நெட் ட்ராபிக் ஓட்டத்தை கண்காணிக்க மற்றும் இன்டர்நெட் சேவை வழங்குபவர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படுகிறது.

செல்போன்கள் அல்லது கம்ப்யூட்டர் முதலியவற்றில் மால்வர் தாக்குதல் குறித்த எச்சரிக்கை மற்றும் அவற்றை நீக்கும் வழிமுறையும் இன்டர்நெட் சேவை வழங்குபவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது.

Advertisement

” இன்டர்நெட் சேவை வழங்குபவர்கள் மற்றும் தொழில் துறையுடன் மத்திய இந்திய அரசு இணைந்து இதனை செயல்படுத்தி வருகிறது. மக்களின் டிவைஸ்களில் ஏற்படும் மால்வர் மற்றும் போட்நெட் தாக்குதல் குறித்த விழிப்புணர்வை இந்த திட்டம் அதிகரிக்கும் ” என யூனியன் மினிஸ்டர் பிரசாத் 2017-ல் தெரிவித்து இருந்தார்.

Cyber Swachhta kendra இந்திய ஒன்றிய அரசின் மூலம் கம்ப்யூட்டர் எமெர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆல் இயக்கப்படும் ஆன்டி-வைரஸ் சாஃப்ட்வேர்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம் / Proof Links

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close