தினத்தந்தி நாளிதழில் மராட்டியம் இரண்டாமிடம் என பெரிதாக அச்சிட்டது ஏன் ?

பரவிய செய்தி
பாஜக ஆட்சி செய்யாத மாநிலத்தின் பெயர் போடும் போதே தெரியல இவங்க பாசிச பாஜகவுக்கு எதிரானவங்கன்னு. நாம இப்படிக்கா போவோம்.
மதிப்பீடு
விளக்கம்
இந்திய அளவில் மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் மாநிலங்களின் தர வரிசைப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகிய நிலையில், தினத்தந்தி நாளிதழின் முதல் பக்கத்தில் தமிழகம் முதலிடம் என சிறிதாகவும், மராட்டியம் (மகாராஷ்டிரா) இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக பெரிதாக அச்சிட்டு உள்ளதாக அந்நாளிதழின் முதல் பக்க புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன.
தமிழ் தேசிய ஆதரவாளர்கள், தினத்தந்தி நாளிதழ் தமிழை முதலில் குறிப்பிடாமல் எதற்காக மராட்டியதை குறிப்பிட்டு உள்ளனர் என தங்களின் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதேபோல், பாஜக ஆட்சி இல்லாத மாநிலம் என்பதால் மராட்டியதை முதலில் அச்சிட்டு உள்ளதாக மற்றொரு தரப்பினரும் நாளிதழின் புகைப்படத்தை முகநூல் உள்ளிட்டவையில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், மராட்டியம் இரண்டாமிடம் என பெரிதாய் அச்சிட்டு வெளியான தினத்தந்தி நாளிதழ் தமிழ்நாட்டில் வெளியானவை அல்ல, மும்பை பிரதியாகும். மும்பை நகரில் வெளியாகும் நாளிதழ் என்பதால் அவ்வாறு வெளியிட்டு உள்ளனர். சேலத்தில் வெளியான செய்தியில், தமிழகம் முதல் இடம் என்பது பெரிதாய் வெளியாகி இருக்கிறது.
பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் நாளிதழ்களில் அம்மாநிலத்தின் பெயரை முதலில் குறிப்பிட்டு செய்தித்தாள்கள் வெளியிடுவது வியாபார நோக்கம் என்றும் சிலர் பதிவிட்டும் வருகின்றனர்.