விதியை மீறி தானிஷ் சித்திக்கி இறுதி ஊர்வலம் என தவறான படத்தை பகிரும் இந்து மக்கள் கட்சி !

பரவிய செய்தி

தானிஷ் சித்திக்கி இறுதி சடங்கு.. தவறாக நிர்வகிக்கப்பட்ட கோவிட் நெறிமுறைகள் – யார் என்று தெரியுமா.. மதச்சார்பின்மை

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

ராய்ட்டர்ஸ் பத்திரிகையின் புகைப்பட பத்திரிக்கையாளர் தானிஷ் சித்திக்கி ஆப்கானிஸ்தானில் உயிரிழந்த சம்பவத்திற்கு பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ” தானிஷ் சித்திக்கி உடைய இறுதி ஊர்வலம், கோவிட் நெறிமுறைகளை தாண்டி நிகழ்ந்ததாக ” சாலையில் ஆயிரக்கணக்கானோர் நடுவே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் செல்லும் இப்புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.

உண்மை என்ன ?

இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் போன்றே மேம்பாலத்தின் அருகே கூடிய கூட்டத்தின் புகைப்படத்தை 2019 டிசம்பரில் சிஏஏ, என்ஆர்சி தொடர்பாக மும்பையில் முஸ்லீம் மக்கள் நடத்திய போராட்டம் என பரப்பினர். ஆனால், அது பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : மும்பையில் CAB, NRC-க்கு எதிராக முஸ்லீம் மக்களின் போராட்டமா ?

அதே போன்ற கூட்டத்துடன் இப்புகைப்படமும் ஒத்துப் போவதால் அதை வைத்து தேடுகையில், 2019-ல் பங்களாதேஷ் நாட்டின் சிட்டகாங்அதே  நகரில் கூடிய கூட்டமென என அறிய முடிந்தது.

Advertisement

2019-ல் யூடியூப் சேனல் ஒன்றில் ” jashne Juluse Eid E Miladunnabi | Chittagong,Bangladesh | 2019 ” எனும் தலைப்பில் வெளியான வீடியோவில் மேம்பாலத்தின் அருகே பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அதே வாகனம் செல்லும் காட்சி இடம்பெற்று இருந்தது.  

Twitter link | archived link

ஜூலை 18-ம் தேதி இரவில் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள கல்லறையில் தானிஷ் சித்திக்கியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதாகவே செய்திகள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன.

Twitter link 

முடிவு :

நம் தேடலில், தானிஷ் சித்திக்கி இறுதி ஊர்வலம் என இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட புகைப்படம் 2019-ல் பங்களாதேஷ் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button