This article is from Nov 15, 2020

தீபாவளிக்கு மாமிசம் சாப்பிடுபவர்கள் இந்துக்கள் அல்ல என ஹெச்.ராஜா கூறினாரா ?

பரவிய செய்தி

தீபாவளி  அன்று மாமிசம் சாப்பிடுபவர்கள் ஹிந்துக்களே அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும்- ஹெச்.ராஜா

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா, தீபாவளி நாளன்று அசைவ உணவு உண்பவர்களை இந்துக்களே இல்லை என்றும், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தீபாவளிக்கு இறைச்சிக் கடைகள் மூடப்படும் எனக் கூறியதாக ஓர் புகைப்படம் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?  

தமிழகத்தில் தீபாவளி நாளன்று அசைவ உணவை சமைத்து உண்பது பலரது வீடுகளில் வழக்கத்தில் உள்ளது. அதற்கு எதிராக ஹெச்.ராஜா கூறியதாக இப்படியொரு எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.

ஹெச்.ராஜா இப்படியொரு கருத்தைக் கூறியதாக எடிட் செய்யப்பட்ட இப்புகைப்படம் மட்டுமே சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. மாறாக, செய்தி ஊடகங்களின் நியூஸ் கார்டோ, ட்விட்டர் பதிவோ அல்லது வீடியோ என ஏதும் பகிரப்படவில்லை. ஆதாரமில்லாத உருவாக்கப்பட்ட செய்தி ஒன்றை பகிர்ந்து வருகிறார்கள் என புரிந்து கொள்ள முடிந்தது.

இதையடுத்து, ஹெச்.ராஜா உடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களை ஆராய்கையில், ” பாரதம் உலகின் குருவாய் விளங்கிட அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட இந்த தீபாவளி திருநாளில் வாழ்த்துகிறேன்.” என தீபாவளிக்காக வாழ்த்து கூறிய 5 நிமிட வீடியோ மற்றும் வாழ்த்து புகைப்படம் ஒன்று மட்டுமே வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவிலும் அசைவ உணவு குறித்து ஏதும் பேசவில்லை.

Facebook link | Archive link

முடிவு : 

நம் தேடலில், தீபாவளி  அன்று மாமிசம் சாப்பிடுபவர்கள் ஹிந்துக்களே அல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் தீபாவளி அன்று இறைச்சிக் கடைகள் மூடப்படும் என ஹெச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் வதந்தியே என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader