ஊட்டி-கோவை சாலையில் மான்களா ?| வைரலாகும் புகைப்படங்கள் !

பரவிய செய்தி

ஊட்டி – கோயம்புத்தூர் சாலை அதன் உண்மையான உரிமையாளர்களால் மீட்டெடுக்கப்பட்டது.

மதிப்பீடு

விளக்கம்

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு நிலவி வரும் வேளையில் மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்நிலையில், ஊட்டி-கோவை வழிச்சாலையில் மான்கள் கூட்டமாய் இருப்பதாக இப்புகைப்படம் முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்டவையில் வைரலாகி வருகிறது.

Advertisement

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017 அக்டோபர் 17-ம் தேதி வெல்கம் டு நேச்சர் எனும் ட்விட்டர் பக்கத்தில் ” The Japanese city of Nara is renown for its deer ” என வைரலாகும் புகைப்படத்தின் முழுமையான புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

Twitter link | archived link 

சாலையின் நடுவே இருக்கும் அறிவிப்பு பலகையில் அந்நாட்டு மொழியில் இடம்பெற்ற அறிவிப்பையும் காணலாம்.

Advertisement

இப்புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது எனத் தேடுகையில், 2014- ecoblog எனும் தளத்தில் ” The fawns of Nara in Japan invade the city streets ”  என்ற தலைப்பில் வெளியான செய்தி கிடைத்தது. 

ஜப்பான் நாட்டில் உள்ள நாரா நகரத்தின் சாலைகளில் மான்கள் வந்து அமர்ந்து கொள்ளும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்து உள்ளன. புகைப்படத்தில் மான்கள் அமர்ந்து இருக்கும் பகுதிக்கு அருகே நாரா மான்கள் பூங்கா அமைந்துள்ளது. அங்கிருந்து மான்கள் உணவுக்காகவும், மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து எழும் ஒலியாலும் ஈர்க்கப்பட்டு அங்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button