டெல்லி சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் அமைத்த கூடாரமா?

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி எல்லையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் கூடாரங்களை அமைத்து மழை மற்றும் கடுமையான பனிக்கு இடையே போராடி வருகின்றனர். இப்படி போராடி வரும் விவசாயிகள் டெல்லி எல்லையான சிங்கு எல்லையில் அமைத்த கூடாரம் என இப்புகைப்படம் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், kerranelamassa.fi எனும் இணையதளத்தில் 2013-ம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படமென வைரலாகும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.
getty images தளத்தில், கும்பமேளாவில் அமைக்கப்பட்ட கூடாரங்களை ஆகாய மார்க்கமாக எடுத்த புகைப்படமும் இடம்பெற்று இருக்கிறது.
2020-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி NDTV செய்தியில், சிங்கு எல்லையில் உள்ள பெட்ரோல் பங்கில் போராடும் விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து இருப்பதை ” டென்ட் சிட்டி ” என புகைப்படத்துடன் குறிப்பிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், 2013-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது அமைக்கப்பட்ட கூடாரங்களின் புகைப்படத்தை டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது அமைக்கப்பட்ட கூடாரங்கள் என தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.