This article is from Feb 12, 2020

டெல்லியில் உள்ள அரசு பள்ளி, வகுப்பறையின் புகைப்படங்களா ?

பரவிய செய்தி

இது தனியார் பள்ளி அல்ல. அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் டெல்லி அரசு பள்ளி.. இது வெளிநாட்டு வகுப்பறை அல்ல.. டெல்லி அரசி பள்ளி வகுப்பறை !

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட வளர்ச்சி பணிகளே ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு உதவியதாக கூறப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

முகநூலில் பரவி வரும் மீம் பதிவில் இருக்கும் பள்ளி மற்றும் வகுப்பறையின் புகைப்படங்கள் டெல்லி அரசு பள்ளியைச் சேர்ந்தவையே. அப்புகைப்படங்கள் குறித்து தேடிய பொழுது, 2019 செப்டம்பர் மாதம் Delhi Govt School Pictures என்ற ட்விட்டர் பக்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (GBSSS) உடைய கட்டிடங்கள் என பதிவிட்டு உள்ளனர்.

Twitter link | archived link

Delhi Govt School Pictures என்ற ட்விட்டர் பக்கத்தில் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளின் புகைப்படங்கள் பலவற்றை காணலாம். இதேபோல், 2020 ஜனவரி 24-ம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு அளித்த பதிலில் அரசு பள்ளியின் வகுப்புறை, மாணவர்கள் விளையாடும் பகுதி, ஆடிட்டோரியம் உள்ளிட்டவையின் புகைப்படங்கள் இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | archived link

கடந்த 2017-ல் யூடர்ன் வெளியிட்ட கட்டுரையில், ” அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தியும், அரசு பள்ளிகளை சீரமைத்து மாணவர்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான கல்வியை வழங்கும் நோக்கத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றியுள்ளதாக டெல்லி கல்வி அமைச்சர் கூறியதைக் ” குறிப்பிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க :  டெல்லியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்.

2019 ஜூன் 14-ம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் மத்திய அரசால் இலவசமாக நடத்தப்படும் டெல்லியில் உள்ள நவோதயா பள்ளி என டெல்லி அரசு பள்ளியின் வீடியோவை தவறாக பகிர்ந்து இருந்ததை ஆதாரத்துடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

மேலும் படிக்க : அரசு பள்ளியை நவோதயா பள்ளி என பகிர்ந்த ஹெச்.ராஜா !

Please complete the required fields.




Back to top button
loader