டெல்லி ஜூம்மா மசூதி இமாம் அகமத் புகாரி பாஜகவில் இணைந்ததாகப் பரப்பப்படும் பொய் !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
டெல்லி ஜூம்மா மசூதியின் இமாம் ஜனாப் அகமத் புகாரி பாஜகவில் இணைந்ததாகவும், சனாதன தர்மத்தை இஸ்லாமியர்கள் ஏற்பதாகவும் வீடியோ ஒன்றினை வலதுசாரி சிந்தனையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
டில்லி ஜும்மா மசூதி இமாம் ஜனாப் அஹமத் புகாரி மோடி தலைமை ஏற்று பாஜகவில் இணைந்தார். சனாதன தர்மத்தை ஏற்கும் இஸ்லாமியர்களால் கதிகலங்கும் இடதுசாரி அடிமை கூட்டங்கள்…….. pic.twitter.com/U6v37Aeogx
— Krishnaraj (@Krishna73674119) March 16, 2023
அதில், இஸ்லாமியர் ஒருவருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. அவர்களுக்குப் பின்னால் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய பேனர் ஒன்றும் உள்ளது.
அடேய் உபிஸ் கேட்டுச்சா🧐🧐
டில்லி ஜும்மா மசூதி இமாம் ஜனாப் அஹமத் புகாரி மோடிஜி தலைமை ஏற்று பாஜகவில் இணைந்தார்!💪
நீங்க இன்னும் அவங்கள இங்க ஏமாத்திட்டு திரியிறீங்க 🤦♂️🤦♂️🤦♂️@annamalai_k@amarprasadreddy pic.twitter.com/n6eBoGUpXJ
— பஞ்சாயத்து (@Vibrantman1987) March 16, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவில் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இருப்பதைக் காண முடிகிறது. அதனைக் கொண்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் தேடினோம்.
#SwachhBharat के तहत शौचालयों का निर्माण गरिमा के साथ सभी के लिए जबरदस्त स्वास्थ्य लाभ लेकर आया है खासतौर से महिलाओं के लिए।
इसी क्रम में आज मैंने अपने सांसद निधि से दिल्ली की 'जामा मस्जिद' के गेट नंबर 01 के पास एक शौचालय का शिलान्यास किया।@swachhbharat @BJP4Delhi #JamaMasjid pic.twitter.com/jfTss4oaBm
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 11, 2023
2023ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி பரவக் கூடிய வீடியோ குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படத்தினை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தூய்மை இந்தியாவின் மூலம் கழிவறை கட்டுவது அனைவருக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு மிகப்பெரிய ஆரோக்கிய நலனைக் கொண்டு வந்துள்ளது.
இந்த வரிசையில், இன்று (மார்ச், 11) எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டெல்லி ஜூம்மா மசூதி அருகில் கழிப்பறை அடிக்கல் நாட்டினேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/drharshvardhan/status/1634535680230453249
மேற்கொண்டு தேடியதில், ஷாஹி இமாம் பேசக்கூடிய வீடியோவினையும் ஹர்ஷ் வர்தன் பதிவிட்டுள்ளார். அதில், ‘இது எனது கடமை ஷாஹி இமாம் புகாரி! ஜூம்மா மசூதி டெல்லி மற்றும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வீடியோவில் இமாம் தனது உரையில், உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் ஜூம்மா மசூதிக்கு வருகை புரிகின்றனர். மசூதியைச் சுற்றி சில அடிப்படை வசதிகள் இல்லை. ஹர்ஷ் வர்தன் அதனை அமைக்க உதவி செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
सुखद व ऐतिहासिक क्षण!
कार्यक्रम को संबोधित करते हुए मैंने 1994 के उस दौर को भी याद किया जब दिल्ली का स्वास्थ्य मंत्री रहते हुए 'पोलियो मुक्त भारत' के पुण्य ध्येय के साथ मुझे #JamaMasjid प्रांगण में आने का अवसर मिला था
तब दुनिया के 60% पोलियो के मरीज भारत में ही थे।@BJP4Delhi pic.twitter.com/ZB1uYD2cA4
— Dr Harsh Vardhan (@drharshvardhan) March 11, 2023
மேலும், ஹர்ஷ் வர்தன் தான் பேசிய வீடியோவினையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவற்றில் இருந்து பரவக் கூடிய வீடியோ ஷாஹி இமாம் பாஜகவில் இணைந்த வீடியோ அல்ல என்பதை அறிய முடிகிறது. அது டெல்லியில் கழிவறை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்ச்சி.
மேலும் படிக்க : கல்யாண் ராமன் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக தவறாக பரப்பிய செல்வ குமார் !
முன்னதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக பாஜகவின் தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பொய்யான தகவலை பதிவிட்டிருந்தார். அதன் உண்மைத் தன்மை குறித்து யூடர்ன் செய்தி வெளியிட்டுள்ளது.
முடிவு :
நம் தேடலில், டெல்லி ஜூம்மா மசூதியின் ஷாஹி இமாம் பாஜகவில் இணைந்ததாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அந்த வீடியோ கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா. அந்நிகழ்வில், பாஜகவைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் டெல்லி ஜூம்மா மசூதியைச் சேர்ந்த ஷாஹி இமாம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.