டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை திட்டம் என தவறான புகைப்படத்தை பதிவிட்டு நீக்கிய நிதின் கட்கரி !

பரவிய செய்தி

புதிதாக மின்னல் வேகத்தில் தயார் ஆகி கொண்டு இருக்கும் மும்பை – டெல்லி 8 வழி சாலை..

Facebook link

மதிப்பீடு

விளக்கம்

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையால் டெல்லி மற்றும் மும்பை இடையே அமைக்கப்பட உள்ள 8 வழிசாலை திட்டம் குறித்து பகிரப்படும் பதிவுகள் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருகின்றன.

Advertisement

நிலைத்தகவல் : ” புதிதாக மின்னல் வேகத்தில் தயார் ஆகி கொண்டு இருக்கும் மும்பை – டெல்லி 8 வழி சாலை. 90,000 கோடி ப்ராஜெக்ட். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதி முக்கிய பங்கு வகிக்க போகும் infrastructure ப்ராஜெக்ட். ஏற்கனவே இருக்கும் 1415 கிலோமீட்டர், 6 வழி சாலையை விட புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள 1290 கிலோமீட்டர் 8 வழி சாலையால் பயண தூரம் கிட்டத்தட்ட்ட 8 – 10 மணி நேரம் வரை குறைகிறது. நாள் ஒன்றுக்கு 37.5 கிலோமீட்டர் என்ற இலக்குடன் சாலையை கட்டுமானம் செய்து வருகிறார்கள், இதுவே இந்தியாவின் High Speed Construction Road ஆகும்.

முக்கியமாக இது சுற்றுபுற சூழல், வன விலங்குகள் நடமாட்டம், கார்பன் எமிசன் கன்ட்ரோல் போன்றவற்றை கருத்தில் கொண்டு பல லட்ச மரங்கள் புதிதாக நடப்பட்டு பல மேம்பாலங்கள்/ Tunnel கள் என்று தயார் ஆகும் “Greenfield Corridors ” ப்ராஜெக்ட். வனவிலங்குகளின் நடமாடத்தை தடுக்கா வண்ணம் Tunnel-கள் கொண்ட சாலைகள் ஆசியாவில் முதல் முறையாக. கொஞ்சம் இந்த திட்டம் பற்றி தேடி பார்க்கவும் ” என திட்டத்துடன் தொடர்புடையதாக இரு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை என்ன ?

இந்தியாவின் தலைநகரம் டெல்லி முதல் மும்பை இடையே தோராயமாக 1 லட்சம் கோடி மதிப்பில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் தொடர்பாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Advertisement

Twitter link | Archive link 

வைரல் செய்யப்படும் புகைப்படங்களை இந்திய சாலைகள் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜூலை 20-ம் தேதி வெளியிட்டு இருந்தார். ஆனால், அந்த ட்வீட் பதிவை அவர் நீக்கி விட்டார்.

முதல் புகைப்படம் :

Ankleshwar எனும் பகுதி குறிப்பிட்டுள்ள முதல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், நொய்டா முதல் ஆக்ரா வரை 165கி.மீ தொலைவிற்கு 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட யமுனா அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் இப்பகுதி வருகிறது என அறிய முடிந்தது.

இரண்டாவது புகைப்படம் :

பாரூஷ் பகுதியில் நர்மதா நதி பாலம் என இடம்பெற்று உள்ள புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” 2016-ம் ஆண்டு struccore எனும் இணையதளத்தில், குஜராத் மாநிலத்தின் பாரூஷ் பகுதியில் நர்மதா ஆற்றில் இந்தியாவின் மிக நீளமான கேபிள் பாலம் விரைவில் தொடங்கப்படும் என வைரல் செய்யப்படும் டிஜிட்டல் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்கள்.

நர்மதா நதியில் கட்டப்பட்டுள்ள நீளமான கேபிள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ளன. 2018-ல் Transforming india எனும் யூடியூப் சேனலில் அந்த பாலம் குறித்து வீடியோ வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், டெல்லி மற்றும் மும்பை இடையேயான அதிவேக நெடுஞ்சாலை திட்டம் தொடர்பாக பகிரப்பட்ட சாலையின் புகைப்படம் யமுனா நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பாட்டில் இருப்பது. குஜராத் நர்மதா நதியின் கேபிள் பாலம் பயன்பாட்டிற்கு வந்து சில ஆண்டுகள் ஆகியுள்ளன. இவ்விரு புகைப்படங்களை பகிர்ந்த அமைச்சர் நிதின் கட்கரி அந்த பதிவை நீக்கி இருக்கிறார் என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button