This article is from Oct 23, 2019

139-க்கு அழைத்தால் ரயிலில் இறங்குமிடம் குறித்து எச்சரிக்கை அழைப்பு வருமா ?

பரவிய செய்தி

ரயில் பயணிகளின் கவனத்திற்கு !

இரவு நேர இரயில் பயணத்தின் போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139-க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும். பலருக்கு பயன் தரக்கூடிய இந்த தகவலை அனைவருக்கும் பகிரலாமே !.

மதிப்பீடு

விளக்கம்

நாம் பயணிக்கக்கூடிய இரயில் எப்பொழுது வரும், நாம் இறங்க வேண்டிய இடத்திற்கு எப்பொழுது சென்றடையும், ஒருவேளை இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டுவிடுவோமோ என்ற அச்சம் இரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இருக்கக்கூடியதே.

இப்படி இருக்கையில், இரயிலில் பயணிக்கும் பொழுது நாம் சேர வேண்டிய இடம் வந்ததும் எச்சரிக்கை அழைப்பை பெற ” 139 ”  என்ற எண் உதவியாக இருக்கும் என்ற தகவல் ” இரயில் பயணிகளின் கவனத்திற்கு ” எனப் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டது.

2009-ம் ஆண்டிலேயே பயன்பாட்டிற்கு வந்த ” 139 ”  என்ற இரயில் சேவை எண் ஆனது ரயில்வே துறையால் அறிமுகம் செய்யப்பட்ட உதவி எண். இந்த எண்ணின் மூலம் பல வசதிகளை பெற முடிகிறது . செல்போனில் 139 என்ற எண்ணை அழைப்பு/எஸ்எம்எஸ் மூலம் பயன்படுத்தி இரயில் வரும் நேரம், இடம்,  புறப்படும் நேரத்தை அறிந்து கொள்ளலாம். மேலும், உங்களின் PNR எண்ணை பயன்படுத்தி முன்பதிவு நிலையையும், இடவசதி நிலையையும் அறிந்து கொள்ள முடியும் எனக் கூறப்படுகிறது.

2016-ம் ஆண்டில் வெளியான செய்திகளில் பொதுமக்களின் வசதிக்காக ” 139 ” என்ற எண்ணை அழைத்து பதிவு செய்த ரயில் சீட்டை ரத்து செய்யும் எளிய வசதியை மத்திய ரயில்வே துறை ஏற்படுத்தி தந்துள்ளதாக வெளியாகி இருக்கிறது. இதற்கு அளிக்கப்பட்டு இருக்கும் வழிகாட்டுதல்களை முறையாக பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

இரயில் எச்சரிக்கை அழைப்பு : 

இரயிலில் பயணிக்கும் பொழுது பலருக்கும் தூக்கத்தை கெடுக்கும் எண்ணம் எதுவென்றால் நாம் இறங்க வேண்டிய இடத்தை விட்டு தாண்டி விட்டோமோ என்ற அச்சமே. அதற்காகவும் 139 உதவி எண்ணை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளார்.

சேரும் இடத்திற்காக எச்சரிக்கை அழைப்பு பெற விரும்புவர்கள் 139 என்ற எண்ணிற்கு டயல் செய்து உங்களுக்கு பொருத்தமான மொழியை தேர்ந்தெடுத்து , IVR மெனுவில் விருப்பம் 7-ஐ தேர்வு செய்து சேரும் இடத்திற்கான எச்சரிக்கை அழைப்பிற்கு எண் 2-ஐ அழுத்தவும். பின் உங்களின் 10 இலக்க PNR எண்ணை டைப் செய்து உறுதி செய்ய 1-ஐ அழுத்தவும் எனக் IRCTC சேவை தரப்பில் அளிக்கப்பட்ட விவரங்கள் தெரிவிக்கின்றன.

139 எண் மூலம் எஸ்.எம்.எஸ் மூலமாக எச்சரிக்கை அழைப்பை பெறவும் வழிமுறைகள் , Customer Service Executive உதவி மூலம் Wake-up அலாரம் குறித்தும் வழிமுறைகள் அளிக்கப்பட்டு உள்ளன.

இரயில் பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் 139 எண் சேவையை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது குறித்த செய்திகள் கிடைத்துள்ளன . பயணிகள் இறங்க வேண்டிய இடம் குறித்து எச்சரிக்கை அழைப்பை பெற 139 எண்ணை பயன்படுத்தலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கிடைத்துள்ளன.

எனினும் , 139 என்ற இரயில் சேவை உதவி எண் எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பதை மக்கள் பயன்படுத்தி தெரிந்து கொள்ளுங்கள் . சேவையை குறித்த உங்களின் தகவல்களையும் எங்களிடம் பகிர்ந்து கொண்டால் , அதையும் கட்டுரையுடன் இணைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader