110 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் மம்மி !

பரவிய செய்தி

இது டைனோசரின் புதைப்படிமம் அல்ல, இது மம்மி ஆகும். 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு னோடோசோர் ஆற்றின் வெள்ளப் பெருக்கத்தில் மூழ்கிடித்துச் செல்லப்பட்டு கடலில் வீசியது. கடலில் வீசிய பிறகு பெருங்கடல் தரையில் அழுத்தப்பட்டு மறைந்து விட்டது.  இதன் அசல் எடையான 3,000எல்பிஎஸ் இல் 2,500-ஐ கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு

சுருக்கம்

110 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் இனத்தைச் சேர்ந்த னோடோசோர் எனும் உயிரினத்தின் பதப்படுத்தப்பட்ட உடல் கனடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு Royal Tyrrell அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

விளக்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் உடல்கள் கெடாமல் இருக்க பதப்படுத்தி வைத்து இருக்கும் முறை பற்றி அறிந்து இருப்போம். மனிதர்களின் மம்மி உடல்கள் பல அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது.

Advertisement

ஆனால், ஒரு டைனோசர் உயிரினத்தின் பதப்படுத்தப்பட்ட உடல் முழுமையான நிலையில் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகளை மட்டுமே வைத்து அதன் உடல் அமைப்பு எப்படி இருக்கும் என தீர்மானத்தினர். ஆனால், கனடாவில் ஒரு டைனோசரின் முழுமையான உடலே கிடைத்து இருக்கிறது.

2011-ம் ஆண்டில் கனடா நாட்டின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள Fort McMurray-யில் இருந்து வடக்கில் 17 மைல்கள் தொலைவில் அமைந்து இருக்கும் சுரங்கத்தில் பாறைகளுடன் இணைந்து பதப்படுத்தப்பட்ட நிலையில் டிராகன் போன்ற உயிரினம் ஒன்று கண்டுபிக்கப்பட்டது.

” இது அடிப்படையில் டைனோசர் மம்மி. இது உண்மையில் அபூர்வமானது ” என ஆல்பர்ட்டாவில் உள்ள Royal Tyrrell மியூசியத்தின் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு இயக்குனர் டான் பிரிங்மேன் தெரிவித்தார். 110 மில்லியன் ஆண்டுகள் முந்தைய காலத்தில் வாழ்ந்த உயிரினத்தின் தோல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ஆல்பர்ட்டா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியம்.

Advertisement

பாறைகளுடன் இணைந்து இருந்த காரணத்தினால் அதன் மீது இருந்த பாறைகளை நீக்கி அதன் முழுமையான உருவத்தை பெறும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கினர். கனடா மியூசியத்தில் வைத்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். சுமார் 7 ஆயிரம் மணி நேர பணிகளுக்கு பிறகு அதன் முழுமையான உருவம் கண்டறியப்பட்டது.

இந்த உயிரினம் டைனோசர் உயிரின வகையில் தாவரங்களை உண்டு வாழும் னோடோசோர் வகை உயிரினமாகும். 110 ஆண்டுகளுக்கு முன்பு னோடோசோர் உயிரினம் ஆற்றின் வெள்ளப் பெருக்கத்தில் மூழ்கடித்துச் செல்லப்பட்டு கடலில் வீசிய பிறகு பெருங்கடல் தரையில் அழுத்தப்பட்டு மறைந்து விட்டது. கடலில் பல மில்லியன் ஆண்டுகள் கெடாமல் இருந்துள்ளது.

தற்பொழுது அதன் உடலின் மேல் கவசங்களான தோல் பகுதியின் மூலம் அதன் உருவம் கணினி வடிவமைப்பின் மூலம் உருவாக்கி உள்ளனர். னோடோசோர் உடலின் நீளம் 18 அடி மற்றும் எடை கிட்டத்தட்ட 3,000 பவுண்ட்ஸ் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அதில், 2,500 பவுண்ட்ஸ் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளனர்.

கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட னோடோசார் நன்கு பதப்படுத்தப்பட்ட உயிரினத்தில் தனிச் சிறப்பு உடைய உயிரினமாக கருதப்படுகிறது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Subscribe with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close