இயக்குநர் மோகன் ஜி தயாரிப்பாளரிடம் ரூ.30 லட்சத்தை ஏமாற்றியதாகப் பரவும் போலி நியூஸ் கார்டு !

பரவிய செய்தி
பணம் மரத்துலயா காய்க்குது ? ஜெ.எஸ்.கே.கோபி ஆதங்கம். இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக்கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி என்னிடம் ஏமாற்றியுள்ளார். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது ? காவல்துறை தலையிட்டு எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும். இயக்குனர் மோகன் ஜி மீது ஜெ.எஸ்.கே.கோபி குற்றச்சாட்டு.
மதிப்பீடு
விளக்கம்
திரௌபதி திரைப்பட இயக்குநர் மோகன் ஜி தற்போது செல்வராகவனின் நடிப்பில் பகாசூரன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக்கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி ஏமாற்றியதாக தயாரிப்பாளர் கோபி தெரிவித்துள்ளார் என ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டு ஒன்று சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன ?
பரப்பப்படும் செய்தி கார்டு குறித்து ஜூனியர் விகடனின் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஜூலை 1-ம் தேதி அப்படி எந்த செய்தியும் வெளியாகவில்லை.
ஜூனியர் விகடனின் நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்து உள்ளார்கள்.
அதுமட்டுமின்றி, 30 லட்சத்தை ஏமாற்றியதாகப் பரப்பப்படும் செய்தி போலியானது என இயக்குநர் மோகன் ஜி மற்றும் தயாரிப்பாளர் கோபி ஆகிய இருவரும் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர்.
முடிவு :
நம் தேடலில், இந்துத்துவாவுக்கு ஆதரவாக படம் எடுக்கிறேன் எனக் கூறி முப்பது லட்சம் வரை மோகன் ஜி என்னிடம் ஏமாற்றியுள்ளார், காவல்துறை தலையிட்டு எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும் என இயக்குனர் மோகன் ஜி மீது ஜெ.எஸ்.கே.கோபி குற்றச்சாட்டு எனப் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.