இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் மரணம் என ஃபேஸ்புக் வதந்தி !

பரவிய செய்தி

R.சந்தர்ராஜன் அவர்கள் இன்று மாரடைப்பால் அகாலமரணம் அடைந்தார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிப்பீடு

விளக்கம்

இயக்குனர், நடிகர் என திரைத்துறையில் பன்முகத்தன்மைக் கொண்டவராக இருந்து வருபவர் ஆர்.சுந்தர்ராஜன்.  70 வயதான ஆர்.சுந்தர்ராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என வதந்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இதையடுத்து, இணையத்தில் வைரலாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. தனது தந்தை நலமாக உள்ளார் என ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் மகன் அசோக் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

” என்னுடைய தந்தை ஆர்.சுந்தர்ராஜன் உடல் நலத்துடன் நலமாக உள்ளார். தற்போது சென்னை படப்பிடிப்பில் உள்ளார். தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் ” என தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.சுந்தர்ராஜன் , நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து கடுமையாக விமர்சித்து இருந்தார். இதையடுத்து, அவர் இறந்து விட்டாதாக வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

பிரபலமானவர்கள் இறந்து விட்டதாக வதந்திகள் பரப்புவது தொடர்ந்து பார்க்க முடிகிறது. சில நேரங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வதந்திகளை பரப்புகின்றனர்.

Advertisement

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button