வழக்கறிஞர் பி.வில்சன் கூடங்குளம், கெயில்-க்கு ஆதரவாக வாதாடினாரா ?

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் கூடங்குளம், கூடங்குளம் என இந்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட Additional Solicitor-General ஆன P.Wilson திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராம்.. இரண்டும் ஒரே வில்சன் தான்.. இவ்வளவு பெரிய கட்சியில் வேற ஆளே கிடைக்கலயா என்ன…

மதிப்பீடு

விளக்கம்

திமுக சார்பில் மாநிலங்களவைக்கு செல்லும் எம்.பியாக வழக்கறிஞர் பி.வில்சன் இடம்பெற்று இருந்தது சமூக வலைதளங்களில் எதிர்ப்பை சந்தித்து உள்ளது எனக் கூறலாம். வழக்கறிஞர் வில்சன் கூடங்குளம், கெயில் திட்டத்திற்கு அரசு ஆதரவாக வாதாடியவர் என பதிவுகளில் கூறப்பட்டு இருக்கின்றன. அவரைப் பற்றியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை ஒன்றன் பின் ஒன்றாக காண்போம்.

Advertisement

வழக்கறிஞர் பி.வில்சன் :

பி.வில்சன் உடைய வழக்கறிஞர் தொழில் குறித்து ஆராய்கையில், ஆகஸ்ட் 2008 முதல் மே 2011 வரையில் தமிழக அரசின் அடிஷனல் அட்வகேட் ஜெனரல்(ஏஏஜி) ஆக பதவி வகித்தார். அதன் பிறகு ஆகஸ்ட் 2012-ல் இருந்து 2014 மே வரையில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஃப் சௌத்இந்தியா ஆக பதவி வகித்தார். அப்பொழுது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார்.

கெயில் திட்டம் :

கெயில் இயற்கை எரிவாயு திட்டத்தின் சார்பில் தமிழகத்தில் கோயம்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நிலங்களில் குழாய்கள் பதிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், விவசாய நிலங்களில் குழாய்கள் பதிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பொழுது தமிழக அரசு இயற்கை எரிவாயு திட்டத்தின் குழாய்களை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் விவசாய நிலங்களை பாதிக்காமல் கொண்டு செல்ல நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கெயில் நிறுவனம் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது. அதில், கெயில் சார்பாக மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்த பி.வில்சன் ஆஜராகி இருந்தார். அந்த வழக்கில், மாநில அரசு திட்டத்தின் நன்மைப் பற்றி மக்களுக்கு எடுத்து கூற வேண்டும் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியாக 2013 நவம்பரில் வெளியான செய்தியில் இடம்பெற்று உள்ளது.

கூடங்குளம் :

Advertisement

2013-ல் தமிழகத்தின் கூடங்குளத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய அரசின் சார்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி உள்ளார்.

அப்பொழுது, மத்திய அரசின் சார்பில் ஆஜராகிய அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்(தென்னிந்தியா) பி.வில்சன், ஜூலை 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கவனத்தில் கொண்டு திட்டத்திற்கு ஆணையிடுவதற்கு ஏஇஆர்பி அனுமதி அளித்ததாகவும் மற்றும் அனைத்து வழிமுறைகளும் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும் சமர்ப்பித்தார்.

வழக்கறிஞர் பி.வில்சன் 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு தன் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

முடிவு :

வழக்கறிஞர் பி.வில்சன் கெயில், கூடங்குளம் வழக்குகளில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் எனும் பதவியில் இருந்த பொழுது மத்திய அரசின்(காங்கிரஸ்) அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகியது உண்மையே !.

மேலும் படிக்க : திமுக வழக்கறிஞர் வில்சன் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக ஆஜராகினாரா ?

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதி பெற தொடுக்கப்பட்ட வழக்கு, தமிழக அமைச்சருக்கு எதிராக குட்கா வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் திமுக சார்பாக பி.வில்சன் ஆஜராகி வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button