க.அன்பழகன் தன் இரண்டு மனைவிகளுடன் இருக்கும் புகைப்படமா ?| உண்மை என்ன ?

பரவிய செய்தி

இரண்டுமே நம்ம அன்பழகன் மனைவி தான்..

Facebook link | archived link

மதிப்பீடு

விளக்கம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன் தன் இரு மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் தன் மகளின் கல்லூரி தோழியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற வாசகத்துடன் முகநூலில் தவறான வார்த்தைகளால் பதிவிட்டு வருகின்றனர். இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

பேராசிரியர் அன்பழகன் உடன் புகைப்படத்தில் முதலில் இருப்பவர் மிகவும் வயதான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால், அன்பழகன் மற்றும் அவருக்கு அடுத்து அமர்ந்து இருக்கும் இரண்டாவது மனைவி ஆகிய இருவரும் சிறிது இளமையாக இருப்பதை மேலோட்டாக பார்த்தாலே புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதில் நியாயமில்லை.

அன்பழகன் அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து தேடிய பொழுது, 2013-ம் ஆண்டில் மே மாதம் வெளியான செய்தியில் ” பேராசிரியர் அன்பழகனின் முதல் மனைவி வெற்றிச் செல்வி. அவர் மறைவுக்கு பின்னர் சாந்தகுமாரியை திருமணம் செய்து கொண்டார் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர். பேராசிரியர் அன்பழகனின் முதல் மனைவி வாரிசுகளும், இரண்டாம் மனைவி வாரிசுகளுக்கும் இடையே சொத்து பிரச்சனை எழுந்துள்ளதாக வெளியாகி இருக்கிறது.

1945-ம் ஆண்டு பேராசிரியர் அன்பழகன், வெற்றிச் செல்வி ஆகிய இருவருக்கும் பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அவரின் இறப்பிற்கு பிறகே சாந்தகுமாரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த சாந்தகுமாரி கடந்த 2012-ல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Advertisement

சாந்தகுமாரியின் இறப்பு குறித்து வெளியான செய்தியில் இருந்து, ” திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனைவி சாந்தகுமாரி தனது 78-வது வயதில் இறந்துள்ளார். அப்போழுது க.அன்பழகன் அவர்களுக்கு 90 வயது. க.அன்பழகன் மற்றும் சாந்தகுமாரி ஆகிய இருவருக்கும் இடையே 12 வருட வித்தியாசமே உள்ளது.

பேராசிரியர் அன்பழகன் உடன் புகைப்படத்தில் இருப்பது அவரின் தாயார் சொர்ணாம்பாள் மற்றும் அவரின் இரண்டாம் மனைவி சாந்தகுமாரி ஆவர். தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வைத்து, அவரை முதல் மனைவி என பொருந்தாத தகவலை பரப்பி வருகின்றனர்.

நம்முடைய தேடலில் இருந்து, க.அன்பழகன் தன் இரு மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் என பரப்பப்படும் புகைப்படம் தவறானவை. க.அன்பழகன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சாந்தகுமாரி, அவர் மகளின் கல்லூரி தோழி எனக் கூறுவதும் தவறான தகவல். சாந்தகுமாரி இறக்கும் பொழுது அவருக்கு 78 வயது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button