தர்மபுரி எம்.பி வன்னியர் சங்க சொத்துகளை சுருட்டியதாக ஜூனியர் விகடன் பெயரில் போலிச் செய்தி !

பரவிய செய்தி

தர்மபுரி வன்னியர் சங்கத்தின் 30 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சுருட்டல். திமுக எம்.பி செந்தில்குமார் குடும்பம் அபேஸ்.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தர்மபுரி தொகுதியின் திமுக எம்.பி டாக்டர்.செந்தில்குமாரின் குடும்பம் வன்னியர் சங்கத்தின் 30 கோடி சொத்தை சுருட்டியதாக ஜூனியர் விகடன் இதழில் வெளியாகி இருப்பதாகவும், இதனால் தான் ஜூனியர் விகடன் மீது வழக்கு தொடர்ந்தீர்களா என சமூக வலைதளங்களில் இப்படம் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ?  

கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே தர்மபுரி எம்.பி பற்றி ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று இந்த அட்டைப் படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இதில் ஜூனியர் விகடனின் வார இதழில் இருப்பது போன்று தேதி இல்லை. அதுமட்டுமின்றி, செய்தி மற்றும் புகைப்படம் ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்யபட்டுள்ளது என நன்றாகத் தெரிகிறது .

Advertisement

கடந்த 2021-ல், ” ஜூனியர் விகடனில் இடம்பெற்றது போல சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்த அட்டைப்படம் போலியானது. ஜூனியர் விகடன் பெயரிட்டு இதைப் போலியாகப் பரப்பியவர்கள் மீது சட்டப்படி காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்படும் ” என ஜூனியர் விகடன் ட்வீட் செய்துள்ளது.

Twitter link 

தற்போது திமுக எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் ,”பொய்யான தகவல்களை Photoshop image பதிவிட்டதுக்கு உங்கள் மேல் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் தோழர் ” எனப் போலியான செய்தியை பதிவிட்ட நபரின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.

Archive link 

முடிவு : 

நம் தேடலில், தர்மபுரி திமுக எம்.பி வன்னியர் சங்கத்தின் 30 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சுருட்டியதாக ஜூனியர் விகடன் பெயரில் பரப்பப்படும் செய்தி போலியானது என அறிய முடிகிறது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button