திமுக ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரப்பப்படும் 2015ல் பரவிய பழைய வீடியோ !

பரவிய செய்தி
திமுக திராவிட மாடல் ஆட்சியில் சாலை பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் மிகவும் ஆபத்தானது வாகன ஓட்டிகளுக்கு. இந்த சாலைகள் போடவதறகு ஒரு தடை வாங்கிட யாரும் இல்லையா?
மதிப்பீடு
விளக்கம்
திமுக திராவிட மாடல் ஆட்சியின் சாலை இது தான் என்று சாலையில் வாகனங்கள் செல்லும் போது வரிசையாக வழுக்கி விழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒருவர் சாலையில் வண்டியுடன் வழுக்கி விழும் போது, இப்படி விழுவதில் இவர் ஐம்பதாவது ஆள் என்று வீடியோவில் ஒருவர் கூறுவதையும் கேட்க முடிகிறது.
இதுதான் திராவிட மாடல் சாலை @mkstalin #திருட்டு_திமுக pic.twitter.com/MwwHzEE2uQ
— ⚔கொலைவாள்⚔ (@kolaivaal) May 2, 2023
திமுக திராவிட மாடல் ஆட்சியில் சாலை பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் மிகவும் ஆபத்தானது வாகன ஓட்டிகளுக்கு.
இந்த சாலைகள் போடவதறகு
ஒரு தடை வாங்கிட யாரும் இல்லையா? pic.twitter.com/vP8Ykv7IB6— நல்லாளவருமன் (@nallalavaruman) July 4, 2023
மேலும் பரவி வரும் அப்பதிவுகளில், “சாலை பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த சாலைகள் போடுவதற்கு ஒரு தடை வாங்கிட யாரும் இல்லையா?” என்றும், “திராவிட மாடல் ஆட்சியின் சாலை இது தான்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவில் உள்ள கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2017-இல் இருந்தே பரவலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை லட்சணம். செயற் பொறியாளரின் அறிவு. தினமும் 250ற்கும் மேற்ப்பட்ட விபத்துக்கள். pic.twitter.com/ogBcPB4eAW
— ✨ (@Senthilvelmech1) March 8, 2017
அப்பதிவுகளில், “கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை லட்சணம். செயற் பொறியாளரின் அறிவு. தினமும் 250ற்கும் மேற்ப்பட்ட விபத்துக்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இந்த பதிவில் உள்ள keyword-களை கொண்டு தொடர்புடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் தேடினோம். அப்போது இந்த வீடியோ கடந்த 2015-இல் எடுக்கப்பட்டது என்பதை உறுதிபடுத்த முடிந்தது.
மேலும் அந்த வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில், அவை பாவர் ப்ளாக் (Paver Block) என்று சொல்லப்படுகின்ற சாலை அமைப்பு என்பதையும், தேசிய நெடுஞ்சாலை இல்லை என்பதையும், அறிய முடிந்தது. கூடுதலாக வீடியோவில் காட்சிப்படுத்தப் பட்ட சாலைகள் ஈரமாக இருப்பதையும் காண முடிகிறது.
இதன் மூலம் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோவில் தொடர்ந்து விபத்துகள் நடப்பது போன்று காட்டப்படும் சாலையானது, தற்போதைய திமுக ஆட்சியில் போடப்பட்டது என்று பரவி வரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை.
மேலும் படிக்க: திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் தவறான படம் !
இதற்கு முன்பும், சாலைகள் தொடர்பாக தவறாக பரப்பப்பட்ட செய்திகளை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டின் சாலை எனத் தவறானப் படத்தை பரப்பும் முன்னாள் அதிமுக எம்பி கே.சி.பழனிசாமி..!
மேலும் படிக்க: பாஜக ஆளும் மாநிலத்தில் போடப்பட்ட சாலையை தமிழ்நாடு எனப் பரப்பும் தமிழக பாஜகவினர் !
முடிவு:
நம் தேடலில், திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் போடப்பட்ட ஆபத்தான சாலை எனப் பரவும் வீடியோவானது, அதிமுக ஆட்சியில் 2015-இன் போதே எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது தெளிவாகிறது.