திமுக ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து நடப்பதாகப் பரப்பப்படும் பழைய வீடியோ !

பரவிய செய்தி

நானும் ஏதோ திருவிளக்கு பூஜை நடக்கிறது என்று நினைத்தேன் ??? ஆனால் இது என்ன கலாச்சாரம் என்று தெரியவில்லை திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து தீஸ் ஈஸ் திராவிட மாடல்.

Twitter Link | Archive Link 

மதிப்பீடு

விளக்கம்

பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டில் உடன் அமர்ந்து இருக்கும் 12 நொடிகள் கொண்ட வீடியோ தமிழ்நாட்டில் திருமண விழா ஒன்றில் நிகழ்ந்ததாக பரவி வருகிறது. இது தான் திராவிட மாடல் ஆட்சியா என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்து இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

உண்மை என்ன ?

நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டில்கள் உடன் பெண்கள் அமர்ந்து இருக்கும் வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் வெவ்வேறு மாநிலங்களை குறிப்பிட்டு பரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து இணையத்தில் தேடியபொழுது, அந்த வீடியோ 4 வருட முன் எடுக்கப்பட்டது என தெரியவருகிறது. மேலும், NTV Telugu எனும் செய்தி தளம் இதனை 2019ம் நவம்பர் மாதமே தனது யூடூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

News Link

இதற்கு முன்பாக, 2018ம் ஆண்டு மே மதம் 11ம் தேதியே இந்த வீடியோவை ஒருவர் தனது யூடூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், எங்கு எடுக்கப்பட்டது என எந்த விவரமும் இல்லை.

Advertisement

Video Link 

2018ம் ஜூலை மாதம் “India Telangana women marriage beer party” என்ற தலைப்பில் இந்த வீடியோவை ஒருவர் பதிவிட்டுள்ளார். 2018 மே மாதம் அமர்உஜாலா எனும் இந்தி செய்தி இணையதளத்தில், ” மகாராஷ்டிராவின் பந்திராவில் பிரசாதமாக மது மற்றும் சிக்கன் பெண்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறி இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாக ” வெளியாகி இருக்கிறது. ஆனால், அதிலும் உறுதியான தகவல் இல்லை. இப்படி 2018ம் ஆண்டு இந்த வீடியோவை பலர் யூடூபில் பதிவிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா நகரில் கறி விருந்தில் மதுவானது பெண்களுக்கு பரிமாறப்பட்டதாகவும் இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

இப்படி இணையத்தில் வைரலான பழைய வீடியோவை எடுத்து தமிழ்நாடு, கர்நாடகா என மாற்றி மாற்றி பரப்பி வருகிறார்கள்.

12 நொடிகள் மட்டுமே கொண்ட வீடியோவில் காணப்படும் பெண்கள் சேலை அணிந்திற்கும், பூ உள்ளிட்டவையை கவனிக்கையில் தென்னிந்திய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போன்றே உள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு மது விருந்து எனப் பரப்பப்படும் வீடியோ தவறானது. இந்த வீடியோ கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் சுற்றி வரும் வீடியோ என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button