திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் தவறான படம் !

பரவிய செய்தி

திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் படம்.

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

பாதை ஒன்றில் முன்னும், பின்னும் ஒன்றும் இல்லாமல் மணல், கற்களாக இருக்க ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சாலை அமைக்கப்பட்டு இருக்கும் படத்தை காண்பித்து திமுக ஆட்சியில் நிகழ்ந்ததாக சமூக வலைதளங்களில் இவ்வீடியோ வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

சமீப சில நாட்களில், திமுக ஆட்சியில் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் பைக், தண்ணீர் பைப் உள்ளிட்டவையின் மீதே சாலை அமைத்த சம்பவங்கள் கண்டனத்தைப் பெற்றது. அதேபோல், சில இடங்களில் அமைக்கப்படும் சாலையை கையோடு பெயர்த்து எடுக்கும் அளவிற்கு தரமற்றதாக அமைக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கவே செய்கின்றன.

எனினும், வைரல் செய்யப்படும் புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வைரலான ஒன்று. இந்த படம் குறித்து தேடிய போது, இவ்வீடியோ போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கூட இப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link

கடந்த 2௦2௦ டிசம்பரில் மீம் முகநூல் பக்கம் ஒன்றில், இதே படத்தைப் பயன்படுத்தி மீம் ஒன்றை பதிவு உள்ளனர். இந்த சாலை படம் ட்ரோல் செய்வதற்காகவும், மீம் செய்வதற்காகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Facebook link 

முடிவு : 

நம் தேடலில், திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட சாலை எனப் பரப்பப்படும் படம் தவறானது. திமுக ஆட்சிக்கு வந்தது 2௦21ம் ஆண்டு, வைரல் செய்யப்படும் படம் கடந்த 2௦2௦ம் ஆண்டிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தை அயல்நாட்டைச் சேர்ந்தவர்களும் பதிவிட்டு இருக்கிறார்கள். ஆகையால், இது தமிழ்நாட்டைச் சேர்ந்தது என உறுதிப்படுத்த வாய்ப்பில்லை என அறிய முடிகிறது.

Please complete the required fields.
Back to top button
loader