திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக 2019-ல் நிகழ்ந்த வீடியோவை பரப்பும் பாஜகவின் செளதா மணி !

பரவிய செய்தி

விடியல் ஆட்சி! சட்டம் ஒழுங்கு காற்றில் பற பறக்குது! போலீஸுக்கே தண்ணி காட்டுது! காட்டுது! அதிகாரம் கண்ணைக் கட்டுது! ஆணவம் தலை தூக்குது! கண்டு கொள்ளத்தான் ஆள் இல்லையே…. காவலர்களுக்கே இந்த கதி என்றால் பெண்களின் நிலைமை என்ன மக்களே?

Archive link

மதிப்பீடு

விளக்கம்

தமிழக பாஜகவின் செயற்குழு உறுப்பினரான செளதா மணி என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ” திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, காவலர்களுக்கே இந்த கதியா ” என சாலையில் இளைஞர்கள் சிலர் காவலரை தாக்கும் வீடியோவை பதிவிட்டு உள்ளார்.

உண்மை என்ன ? 

பாஜகவைச் சேர்ந்த செளதா மணி பதிவிட்ட வீடியோ குறித்து தேடுகையில், அந்த வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு சென்னை சாலையில் மதுபோதையில் இருந்த நான்கு பேர் காவலரை தாக்கியதாக NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2019-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி கோடம்பாக்கம் நெடுஞ்சாலைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த கார்த்திகேயன் என்ற காவலரை மதுபோதையில் இருந்த நபர்கள் தாக்கி உள்ளனர். காவலரை தாக்கிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து உள்ளதா இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : பொய் செய்தி பரப்பிய பாஜகவினர்.. திட்டித்தீர்த்த அமைச்சர் பி.டி.ஆர் !

தமிழக பாஜகவைச் சேர்ந்த சௌதா மணி ட்விட்டர் பக்கத்தில் பலமுறை பொய்யான செய்திகள் மற்றும் தகவல்களை பகிர்ந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவு:

நம் தேடலில், திமுக ஆட்சியில் காவலர் தாக்கப்படுவதாக பரப்பப்படும் வீடியோ கடந்த 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னையில் நிகழ்ந்த சம்பவம். அப்போதே அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader