திமுக ஆட்சியில் பெண்களுக்காக திறக்கப்பட்ட மதுக்கடையின் புகைப்படமா ?

பரவிய செய்தி
முதல்வரின் கடின உழைப்பால் பெண்களுக்கென்று தனி மதுக்கடை. விடியல் அரசின் சாதனையில் இதுவும் ஒன்று !
மதிப்பீடு
விளக்கம்
தமிழக முதல்வரின் கடின உழைப்பால் பெண்களுக்கென்று தனி மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளதாகக் கூறி மதுபானக் கடை ஒன்றில் பணம் வாங்கும் பகுதியில் அமர்ந்து இருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன ?
திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக மதுபார் திறக்கப்பட்டு உள்ளதாக 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியின் பக்கத்தை வைத்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பி இருந்தனர்.
மேலும் படிக்க : திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கென்று தனி மதுபார் தொடங்கப்பட்டதா ?
அதன் தொடர்ச்சியாகவே, இந்த புகைப்படத்தையும் பரப்பி வருகிறார்கள் எனத் தோன்றுகிறது. ஏனெனில், இதே புகைப்படம் கடந்த சில ஆண்டுகளாவே சமூக வலைதளங்களில் சுற்றி வந்த புகைப்படம்.
பாண்டிசேரி wine shop owner ஆம் நாங்கூட லாயர் ஆபீஸோன்னு நினச்சேன் #Puducherry_wineshop #pondicherry pic.twitter.com/bYkHmsTdlZ
— ஶ்ரீராம் (@sriraam_v) August 1, 2017
வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2017-ம் ஆண்டு ஸ்ரீராம் எனும் ட்விட்டர் பக்கத்தில்,” பாண்டிசேரி wine shop owner ஆம் நாங்கூட லாயர் ஆபீஸோன்னு நினச்சேன் ” என இதே புகைப்படம் பதிவாகி இருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தித்தாள் பக்கத்தை வைத்து திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு மதுபார் திறக்கப்பட்டு உள்ளதாக வதந்தி பரப்பியது போல் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பிற மாநிலத்தில் பதிவான புகைப்படத்தை வைத்து தற்போது வதந்தி பரப்பி வருகிறார்கள்.
முடிவு :
நம் தேடலில், திமுக ஆட்சியில் மதுரையில் பெண்களுக்கு என்று தனியாக திறக்கப்பட்ட மதுக்கடை எனப் பரப்பப்படும் புகைப்படம் தமிழகத்தைச் சேர்ந்தது அல்ல, கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட புகைப்படம் என அறிய முடிகிறது.