திமுக கட்சியினர் ‘காம வீரரே’ எனப் போஸ்டர் அடித்ததாக பரப்பப்படும் எடிட் செய்த போஸ்டர் !

பரவிய செய்தி

” காம வீரரே “.. அட பாவிகளா பிரிண்ட் போட சொன்னவனும் பார்க்கல, பிரிண்ட் போட்டவனும் பார்க்கல, போஸ்ட்ட ஒட்டியவனும் பார்க்கல ?

Twitter link

மதிப்பீடு

விளக்கம்

திமுக கட்சியினர் சார்பில் அடிக்கப்பட்ட போஸ்டரில், ” ஆகஸ்ட் 6ம் தேதி பிறந்தநாள் காணும் தெற்கு மாவட்ட கழகத்தின் நம்பிக்கையே களப்பணி நாயகரே காம வீரரே ” எனப் போஸ்டர் அடிக்கப்பட்டதாக டிஜிட்டல் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

திமுகவினரின் இப்போஸ்டர் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் முதலே சமூக வலைதளங்களில் பிற அரசியல் கட்சி ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் போஸ்டரில், ” நாகராஜ் M சரவணார் ஒன்றிய அமைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி தென்காசி கிழக்கு ஒன்றியம் ” என இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடுகையில், ” 2021 ஆகஸ்ட் 6ம் தேதி நாகராஜ் சரவணார் ட்விட்டரில் பகிர்ந்த போஸ்டரில் ” கர்ம வீரரே “ என்றே இடம்பெற்று இருக்கிறது.

Twitter link | Archive link 

இந்த பதிவு வெளியான பிறகு ஆகஸ்ட் 7ம் தேதி கிரிஷ் என்எஸ்கே என்பவரின் முகநூல் பக்கத்தில், அட பாவிகளா பிரிண்ட் போட சொன்னவனும் பார்க்கல, பிரிண்ட் போட்டவனும் பார்க்கல, போஸ்ட்ட ஒட்டினவனுமாடா பார்க்கல? வேணும்ணு பண்றீங்களாடா? என எடிட் செய்யப்பட்ட போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.

Facebook link 

திமுகவின் உண்மையான டிஜிட்டல் போஸ்டரில் இருந்த புள்ளியை அழித்து விட்டு ” காம வீரரே ” எனப் போஸ்டர் அடித்ததாக கடந்த ஆண்டில் இருந்தே தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க : அண்ணாமலைப் படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசனுக்கு போஸ்டர் அடித்ததாக திமுகவினர் வதந்தி !

சில நாட்களுக்கு முன்பாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை படத்தை புறக்கணித்து வானதி சீனிவாசனுக்காக பாஜகவினர் போஸ்டர் அடித்ததாக திமுகவினர் பழைய போஸ்டரைத் தவறாகப் பரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், திமுக கட்சியினர் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரில் ” காம வீரரே ” என அடித்ததாகப் பரப்பப்படும் டிஜிட்டல் போஸ்டர் எடிட் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு தென்காசியில் திமுகவினர் கர்ம வீரரே என அடித்த போஸ்டரை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள் என நம்மால் அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader