திமுக தோல்வி அடையும் என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாக வதந்தி!

பரவிய செய்தி

மே 2ஆம் தேதி தேய்பிறை ஷஷ்டி அன்று 11 இடத்தில் சனி இருப்பதால் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வி அடைவது உறுதி, ஸ்டாலினின் நட்சத்திரப்படி 11 ஆவது இடத்தில் சனி வருவதால் அந்த காலகட்டத்தில் வேதனையும், துன்பமுமே அவரை சூழ்ந்திருக்கும்.

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை பிப்ரவரி 26-ம் தேதி மாலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்திலேயே, தேர்தல் முடிவு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மே 2-ம் தேதியைக் குறிப்பிட்டு திமுக தோல்வி அடையும் என பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாக சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

Advertisement

Archive link  

மீம் போன்ற இப்பதிவை பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் என பலரும் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

உண்மை என்ன ? 

Advertisement

ஜோதிடர் பாலாஜி ஹாசன் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த எந்தவொரு கணிப்பையும் வெளியிடவில்லை. தன் புகைப்படத்துடன் பரப்பப்படும் தகவலை மறுத்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Facebook link | Archive link  

அந்த பதிவில், ” நான் இந்த முறை தமிழ்நாடு தேர்தல் பற்றி கணிக்கவில்லை. இந்த முகநூல் மட்டுமே நான் பயன்படுத்தும் முகநூல். இதில் வரும் கருத்துக்களுக்கு மட்டுமே நான் பொறுப்பு.
.
வேண்டுமென்றே சிலர் தவறான தகவலை என் புகைப்படத்தை கூகிளில் எடுத்துக்கொண்டு அவர்களுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பிடித்த கருத்துக்களை எழுதி அதற்கு என் பெயரை சூட்டுகின்றனர். மக்கள் அதை யாரும் நம்ப வேண்டாம் நான் கணிக்கவில்லை. அப்படி கணித்தாலும் இந்த முகநூலில் வரும் கருத்துக்கள் மட்டுமே என்னுடைய கருத்து. என் பெயரை என் புகைப்படத்தை பயன்படுத்தி யூட்யூபில் அல்லது முகநூலில் எழுதப்படும் எதுவும் உண்மை அல்ல. நான் கணித்தால் என்னுடைய பக்கத்தில் மட்டுமே வெளியிடுவேன் என்பதை மக்கள் புரிந்து கொள்க நன்றி.
.
இப்படி போலியாக உங்களுக்கு விருப்பப்படி உங்கள் கட்சிக்கு ஆதரவாக செய்தால் அது உண்மையிலேயே முடிவு போலியாக வந்துவிடும். அப்புறம் நீங்கள் தான் வருத்தப்படுவீர்கள் ” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
தமிழக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் சார்ந்து புரளிகள், தவறான தகவல்கள் அதிகம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. கிண்டலுக்காக கூட போலியான செய்தியை உருவாக்கி பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், 2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தோல்வி அடைவது உறுதி என ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்ததாகப் பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகிறது.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button