பிரதமர் மோடி திமுக அமைச்சர்களுக்கு வணக்கம் வைக்க மறுத்ததாக பாஜகவினர் பரப்பும் எடிட் வீடியோ !

பரவிய செய்தி

திமுக அமைச்சர்களுக்கு பிரதமர் மோடியின் வணக்கம் கிடையாது. 

மதிப்பீடு

விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். மேலும், அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

பிரதமர் மோடி விழா அரங்கத்தின் உள்ளே நடத்து வருகையில் அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை. அமைச்சர்களுக்கு அடுத்ததாக இருந்த தலைமைச் செயலாளர், டி.ஜி.பி என அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வணக்கம் தெரிவித்தார் என 1 நிமிட வீடியோ ஒன்றினை பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநிலச் செயலாளர் கணியம்பூண்டி செந்தில் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/Senthil_TNBJP/status/1591022471662436353

Archive link

https://twitter.com/tpskumar1985/status/1591038959966384129

Archive link

உண்மை என்ன ?

Advertisement

பிரதமர் மோடி தமிழ்நாடு அமைச்சர்களுக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை எனப் பரவும் வீடியோ குறித்து இணையத்தில் தேடினோம். பட்டமளிப்பு நிகழ்வின் முழு வீடியோ பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சுமார் 53 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில் 40 வினாடிக்குப் பிறகு மோடி விழா அரங்கத்தின் உள்ளே வருவதைக் காண முடிகிறது. 

பலருக்கும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு வருகையில், அங்கு உள்ள ஊராக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன், சமூகநலம் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோருக்கு பிரதமர் வணக்கம் தெரிவிப்பதைக் காண முடிகிறது. 

அப்போது பதிலுக்கு அமைச்சர்களும் மோடிக்கு வணக்கம் தெரிவிக்கின்றனர். அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ஆனால் மோடி மரியாதை தெரியாதவர் என்பது போல சித்தரித்து, வீடியோவை எடிட் செய்து பாஜகவினரே பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : பாஜக, திமுகவினர் மாற்றி மாற்றிப் பரப்பும் கழிவறை புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது ?

இதேபோல், பாஜகவின் கணியம்பூண்டி செந்தில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கழிவறை எனத் தவறான புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். அப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையினை கண்டறிந்து யூடர்ன் கட்டுரை வெளியிட்டது.

முடிவு : 

நம் தேடலில், பிரதமர் மோடி தமிழ்நாடு அமைச்சர்களுக்கு வணக்கம் செலுத்தவில்லை எனப் பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மோடி அமைச்சர்களுக்கு வணக்கம் செலுத்துவதும், பதிலுக்கு அமைச்சர்கள் மோடிக்கு வணக்கம் செலுத்துவதும் முழுமையான வீடியோக்களில் காண முடிகிறது. அதை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது. 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button