This article is from Mar 24, 2021

கோவில்களை இடித்து கலைஞர் படிப்பறிவு மையம் அமைப்போம் என திமுக கூறியதா ?| பரவும் போலி வாக்குறுதிகள் !

பரவிய செய்தி

அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்து கோவில்களை இடித்துவிட்டு கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கடும் : மு.க.ஸ்டாலின்

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பிறகு ஒவ்வொரு கட்சியும் கூறாத வாக்குறுதியை கூறியது போன்றும், போலியான வாக்குறுதிகளை ஃபோட்டோஷாப் செய்தும் பரப்புவது அதிகரித்து வருகிறது.

Archive link

இந்நிலையில், திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாக்குறுதியில், “அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்து கோவில்களை இடித்துவிட்டு கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கடும் ” எனக் கூறியதாக ஆன்லைன் போஸ்டர் படத்தை வைரல் செய்து வருகிறார்கள்.

இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது எனத் தெளிவாய் தெரிகிறது. இப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் 25,000 இளைஞர்கள் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள் ” என்பது போன்ற பிற வாக்குறுதி தொடர்பான பதிவுகளையே திமுக ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link 

இதைத் தவிர, போலியான வாக்குறுதிகளை கொண்டு ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பையே சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

Archive link 

சில புகைப்படங்கள் திமுகவை கிண்டல் செய்ய எடிட் செய்யப்பட்டு இருக்கிறது எனத் தெளிவாய் தெரிகிறது. ஆனால், சில பதிவுகளை பலரும் உண்மை என நினைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?

இதற்கு முன்பாக, பாஜக தேர்தல் வாக்குறுதிகள் என போலி வாக்குறுதிகளை ஃபோட்டோஷாப் செய்து வதந்திகளை பரப்பி இருந்தனர். அதையடுத்து, திமுகவிற்கு எதிராக ஃபோட்டோஷாப் செய்யப்பட்டதை சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : ஆடு, கோழி பலியிட தடை, வட மாநிலத்தவருக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக வதந்தி ! 

முடிவு :

நம் தேடலில், அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள இந்து கோவில்களை இடித்துவிட்டு கலைஞர் படிப்பறிவு மையம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாக பரப்பப்படும் ஆன்லைன் போஸ்டர் ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட போலியானது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader