This article is from Jan 26, 2022

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பகிர்ந்த பழைய அலங்கார ஊர்தி புகைப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

2022 இந்திய குடியரசு தினத்தின் டெல்லி அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் மற்றும் அரசு துறைகளின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இதில், பங்கேற்ற சில அலங்கார ஊர்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்நிலையில், மன்னார்குடி திமுக எம்எல்ஏவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” இது எந்தமாதிரியான சுதந்திரப் போராட்ட வீரர் ” என குடியரசு தினத்தைக் குறிப்பிட்டு காமதேனு இடம்பெற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ?  

குடியரசு தின அணிவகுப்பில் காமதேனு இடம்பெற்ற அலங்கார ஊர்தி குறித்து தேடிப்பார்க்கையில், அது 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது குடியரசு தின விழாவில் கர்நாடகா சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் புகைப்படம் என அறிய முடிந்தது.

2013-ல் தூர்தர்சன் நேஷனல் யூடியூப் சேனலில் வெளியான குடியரசு தின விழாவின் வீடியோவில் 59:02வது நிமிடத்தில் கர்நாடகாவின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் வருவதை பார்க்கலாம்.

ஒவ்வொரு மாநிலமும் ஒரு கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அலங்கார ஊர்தியை உருவாக்கி அணிவகுப்பில் பங்கேற்கின்றன. 2022 குடியரசு தினத்தில் கர்நாடகா சார்பில் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் தொடர்பான அலங்கார ஊர்தி இடம்பெற்றது. கர்நாடகா அலங்கார ஊர்தியில் ஆஞ்சநேயர் உருவம் இடம்பெற்றதும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது.

முடிவு : 

நம் தேடலில், திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ட்விட்டரில் பகிர்ந்த காமதேனு இடம்பெற்ற அலங்கார ஊர்தி 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தில் கர்நாடகா மாநிலம் தரப்பில் பங்கேற்றது. பழைய புகைப்படத்தை தவறாக பதிவிட்டு இருக்கிறார் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader