திமுக எம்.பி செந்தில்குமார் கிரிக்கெட் விளையாடி கீழே விழுந்ததாக பரப்பப்படும் பொய் வீடியோ !

பரவிய செய்தி

தர்மபுரி எம்பியின் அபாரமான பேட்டிங்..

Facebook link 

மதிப்பீடு

விளக்கம்

தர்மபுரி தொகுதியின் திமுக எம்.பி செந்தில்குமாரின் அபார பேட்டிங் எனக் கூறி 20 நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், ” கிரிக்கெட் விளையாடும் போது பேட்டிங் பிடிக்கும் நபர் சுற்றி ஸ்டெம்ப் மீதே விழுந்து எழுந்திருக்கும் காட்சிகள் ” இடம்பெற்று இருக்கின்றன. இந்த வீடியோவை கிஷோர் கே சுவாமி, இந்து முன்னணி அமைப்பினர், பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்களும் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ” ஜூன் 11ம் தேதி ஜெய்பூரைச் சேர்ந்த ரமேஷ்வர் சிங் என்பவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ இந்தி பாடலுடன் பதிவாகி இருப்பதை காண முடிந்தது.

Twitter link

மேற்காணும் ட்வீட் பதிவில் உள்ள வீடியோவில் இருந்து கீஃப்ரேம்களை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், இதேபோல் சமூக வலைதளங்களில் சில பதிவுகள் கிடைத்தன. அதில், ஜூன் 11ம் தேதி ABC Sport எனும் முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. எனினும், gramin tennis cricket shirdi என்பவருக்கு வீடியோ கடேர்சி கொடுக்கப்பட்டு இருந்தது.

Facebook link 

gramin tennis cricket shirdi எனும் சமூக வலைதள ஐடி குறித்து தேடிய போது, ஜூன் 8ம் தேதி gramin tennis cricket shirdi எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே இந்தி பாடலுடன் இந்த வீடியோ பதிவாகி 14 மில்லியன் பார்வையைப் பெற்று இருக்கிறது. மும்பையைச் சேர்ந்த இந்த இன்ஸ்டா பக்கத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

Instagram link

வைரலான தெளிவான வீடியோவில் கீழே விழும் நபரின் முகம் மற்றும் உடல் தோற்றம் உள்ளிட்டவை திமுக எம்.பியுடன் வேறுபடுவதை காணலாம். அதுமட்டுமின்றி, இந்தி பாடலுடன் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவில் ஆடியோவை நீக்கி விட்டு தமிழில் தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

முடிவு : 

நம் தேடலில், தர்மபுரி திமுக எம்பியின் அபாரமான பேட்டிங் எனப் பரப்பப்படும் வீடியோவில் பேட்டிங் செய்யும் நபர் எம்.பி செந்தில்குமார் இல்லை. இரண்டும் வெவ்வேறு நபர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்தி பாடலுடன் வைரல் செய்யப்பட்ட வீடியோவில் ஆடியோவை நீக்கி விட்டு திமுக எம்பி எனத் தவறாகப் பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader