This article is from Feb 05, 2020

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசினால் திமுக தோல்வி அடையும் என பி.கே கூறினாரா ?

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

2021 சட்டசபைத் தேர்தலில் திமுக பிரசாந்த் கிஷோர் உடைய ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக மு.க.ஸ்டாலின் தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அந்நிறுவனமும் அதைப் பகிர்ந்து இருத்தது.

இந்த தகவல் வெளியான பிறகு, ” இனி மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக திமுக பேசி வந்தால் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவது உறுதி ” என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று PMK Forever என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் திமுக தேர்தலில் தோல்வி அடையும் என பிரசாந்த் கிஷோர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக தந்தி டிவி உள்ளிட்ட செய்திகள் எதிலும் வெளியாகவில்லை. தந்தி டிவி செய்தியின் நியூஸ் கார்டில் எடிட் செய்து தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

அரசியல் சார்ந்து தவறான தகவல்களையும், கிண்டல்களை உருவாக்கவும் செய்தி நிறுவனங்களின் நியூஸ்கார்டுகளில் போலியான செய்திகளை எடிட் செய்தி சமூக வலைதளங்களில் பல கட்சி ஆதரவாளர்கள் பரப்பி வருகின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Please complete the required fields.




Back to top button
loader