திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வரக் கூடாது என கமல் கூறினாரா ?

பரவிய செய்தி
தி.மு.க வின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் – கமல்ஹாசன்
மதிப்பீடு
விளக்கம்
திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வந்துவிடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியதாக 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேதியிட்ட புதியதலைமுறை செய்தியின் நியூஸ் கார்டு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த பழைய நியூஸ் கார்டை திமுக ஆதரவாளர்கள் பலரும் கமலுக்கு எதிராக வசைபாடி பகிர்ந்து வருகிறார்கள்.
உண்மை என்ன ?
தமிழக தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியலில் எதிர் எதிரே இருக்கும் கட்சிகள் கடுமையாக விமர்சித்துக் கொள்வது உண்டு. ஆனால், கமல்ஹாசன் திமுகவின் அராஜக ஆட்சி மீண்டும் வரக் கூடாது எனக் கூறியதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை. ஏன், புதியதலைமுறை சேனலிலும் அப்படியொரு செய்தி இடம்பெறவில்லை.
வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து புதியதலைமுறை செய்தியின் டிஜிட்டல் எடிட்டர் மனோஜ் அவர்களிடம் பேசுகையில், ” இது போலியான நியூஸ் கார்டு. இந்த டெம்ளேட் மாற்றி வருட கணக்கில் ஆகி விட்டது ” எனக் கூறி இருந்தார்.
மேலும் படிக்க : தமிழக தேர்தல்: கட்சிகளுக்கு எதிராக பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !
தமிழக தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளின் ஆதாராளர்கள் மாற்றி மாற்றி எடிட் செய்யப்பட்ட பல போலி நியூஸ் கார்டுகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருவது குறித்து நாம் தொடர்ந்து பதிவிட்டு வருகிறோம்.
மேலும் படிக்க : நல்லாட்சி வழங்கிய அரசு அதிமுக என பரப்பப்படும் பழைய கருத்துக் கணிப்பு !