2500+1500=5000 என்பது ஸ்டாலின் கணக்கு எனப் பரப்பப்படும் எடிட் வீடியோ !

பரவிய செய்தி

5000த்தில் இருந்து 2500 போனால் 1500 சுடலை ராக்ஸ் #தினம்_ஒரு_உளறல்

Facebook link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் மக்கள் முன்பாக பேசும் போது, அதிமுக அரசு ரேசன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாக பேசுகிறார். அப்பொழுது, 2,500 என பேசிய பிறகு 5000-க்கு இன்னும் 1,500 ரூபாய் இருப்பதாக கணக்கு கூறும் 19 நொடிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

உண்மை என்ன ? 

திமுக தலைவர் ஸ்டாலினின் எம்எல்ஏ கணக்கு, பழமொழி உள்ளிட்ட பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ட்ரோல் செய்யப்பட்டவை. தற்போது 2500+1500=5000 ஸ்டாலின் கணக்கு என கிண்டல் செய்து இவ்வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

ஆனால், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதே உண்மை. முதலில் 2,500 என பேசிய பிறகு வீடியோவில் கட் செய்யப்பட்டது தெளிவாய் தெரிகிறது. அதன் பின் 5,000-க்கு மீத தொகை 1,500 ரூபாய் எனக் கூறுவது இடம்பெற்று இருக்கிறது.

டிசம்பர் 28-ம் தேதி  இராணிப்பேட்டை-அனந்தலை ஊராட்சியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது நேரலையாக வெளியாகி இருக்கிறது.

Twitter link | Archive link 

31வது நிமிடத்தில், ” கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உடனடியாக 5000 ரூபாய் அரசு வழங்க வேண்டும் என அறிக்கை விட்டேன். அதை ஏற்கவில்லை 1,000 ரூபாய் என அறிவித்தார்கள். ஆனால், இப்போ தேர்தல் வரும் சமயத்தில் பொங்கலுக்காக 2,500 ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்கள். அதை நான் அப்படியே வரவேற்கிறேன். ஆனால், முதலில் நான் சொன்னது 5,000. அதில் 1000 ரூபாய் கொடுத்தீங்க, இப்போ 2,500 ரூபாய். இப்போ 5,000-க்கு எவ்வளவு மிச்சம் இருக்கு, 1500 ரூபாயா ” என ஸ்டாலின் பேசி இருக்கிறார். 

மு.க.ஸ்டாலின் பேசியதை எடிட் செய்து 2500+1500=5000 ஸ்டாலின் கணக்கு என கிண்டல் செய்து தவறானச் செய்தியை பரப்பி வருகிறார்கள். 2021-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களின் பேச்சு, பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்படுகிறது. இதற்கிடையில், எடிட் செய்யப்பட்ட வீடியோக்களும், கூறாத கருத்துக்களும் தவறாக பரப்பப்படுகின்றன.

அப்டேட் :

2020-ல் பரப்பப்பட்ட எடிட் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த சிடிஆர்.நிர்மல் குமார் ட்விட்டரில் மீண்டும் பதிவிட்டு இருக்கிறார்.

Twitter link | Archive link 

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button