This article is from Apr 14, 2021

உதயநிதி அருகே யூடர்ன் ஆசிரியர் இருப்பதாக நாம் தமிழர் பொறுப்பாளர் வெளியிட்ட போலிப்படம் !

பரவிய செய்தி

மதிப்பீடு

விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் மற்றும் திராவிட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் இருக்கும் மேடையில் யூடர்ன் ஆசிரியர் ஐயன் கார்த்திகேயன் இருப்பது போன்ற எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வசைபாடி வருகின்றனர்.

” திராவிடச் சிறகுகள் ” எனத் தலைப்பிட்டு நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் மேடையில் கருப்பு சட்டை அணிந்த ஒருவரின் தலையை மட்டும் எடிட் செய்து இருக்கிறார்கள் எனத் தெளிவாய் தெரிகிறது.

நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் vjragav என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். பின்னர், அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என யூடர்ன் ஆசிரியர் அவரின் ட்வீட்டை பகிர்ந்த உடன் அந்த ட்வீட் பதிவை vjragav நீக்கி இருக்கிறார்.

Twitter link 

2019 செப்டம்பர் 18-ம் தேதி ராஜ நரசிம்மன் திமுக எனும் ட்விட்டர் பக்கத்தில், ” மாநில இளைஞரணி செயலாளர் திரு. @Udhastalin அவர்கள் தற்போது திராவிடச்சிறகுகள் சார்பில் திருவாரூர்.அர.தருவிடம் எழுதிய “#திருவல்லிக்கேணி முதல் #திருவாரூர் வரை” நூல் அறிமுக விழாவில்…திருவாரூர் மாவட்ட ஆற்றல்மிகு செயலாளர் மாண்புமிகு பூண்டி கே கலைவாணன் MLA அவர்கள் ” என வைரல் செய்யப்படும் நிகழ்ச்சியுடன் தொடர்புடைய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

Twitter link | Archive link 

வைரல் செய்யப்படும் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் கிடைக்கவில்லை. எனினும், இந்த ட்வீட் பதிவில், வைரல் செய்யப்படும் எடிட் புகைப்படத்தில் இருந்தது யார் என்பதை காணலாம்.

கூடுதல் தகவல் :

உண்மையான புகைப்படம் 

Please complete the required fields.




Back to top button
loader