சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை என அமெரிக்கா வீடியோவைப் பகிர்ந்த முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு !

பரவிய செய்தி

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை..

X Link |  Archive Link

மதிப்பீடு

விளக்கம்

சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி 4:50 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த வீடியோவை முன்னாள் உச்சமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு உட்பட பலரும் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

மேலும் ஆள் இல்லாத டாக்ஸியில் தன்னுடைய மகனுடன், வயதான பெண்மணி பயணிப்பது போன்றும், அவர்களுடைய பயணங்களை மொபைலில் அவர்கள் தமிழில் பேசி காட்சிப்படுத்துவது போன்றும் அந்த வீடியோ இடம்பெற்றுள்ளது.

உண்மை என்ன ?

பரவிவரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதல்ல என்பதை அறிய முடிந்தது.

ASK INFORMATION என்ற யூடியூப் பக்கத்தில் இதன் முழு வீடியோ கடந்த செப்டம்பர் 08 அன்று “அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸி” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் அந்த டாக்ஸியில் ஓட்டுனர் இருக்கை இடது பக்கமாக அமைந்திருப்பதையும் காண முடிந்தது. ஆனால் இந்தியாவில் ஓட்டுனர் இருக்கை வலது பக்கமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை இந்தியாவில் எங்கேனும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் தேடி பார்த்தோம். இது குறித்து எந்த ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்படவில்லை.

மேலும் பரவி வரும் வீடியோவில் வரும் டாக்ஸியில் “WAYMO” என்று குறிப்பிடப்பட்டிருப்பதால், அது குறித்து தேடியதில் கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நிறுவனமான Waymo நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் கிடைத்தது. அதில் இந்த டாக்ஸி சேவை இதுவரை பீனிக்ஸ் (அரிசோனா), சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ் போன்ற இடங்களில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல்கள் மூலம் சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

மேலும் படிக்க: இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என கனடா எதிர்க்கட்சி தலைவர் பேசுவதாகப் பரவும் பழைய வீடியோ !

மேலும் படிக்க: இந்தியாவிற்கான பிரிட்டன் நிதியுதவியை திரும்ப கேட்பதாகப் பரவும் ஊடக வீடியோ.. உண்மை பின்னணி என்ன ?

முடிவு:

நம் தேடலில், சென்னையில் டிரைவர் இல்லாத டாக்ஸி சேவை அறிமுகம் என்று பரவி வரும் வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பதையும், இந்த சேவை இன்னும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader