காய்ந்த மிளகாய்களுக்குள் சுற்றித் திரியும் எலிகள் | இந்தியாவைச் சேர்ந்ததா ?

பரவிய செய்தி

எந்த சமையல் என்றாலும் “பாக்கெட் தூள்களை” பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு இந்த வீடியோவை சமர்பிக்கின்றோம்.

மதிப்பீடு

விளக்கம்

உணவுப் பொருட்கள் தேக்கி வைத்து இருக்கும் இடங்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருக்கக்கூடும். இங்கு காரம் நிறைந்த மிளகாய்களுக்குள் எலிகளின் கூட்டமே சுற்றித் திரியும் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்ததோடு, சுகாதாரம் குறித்தும் சிந்திக்க வைக்கிறது.

Advertisement

காய்ந்த சிவப்பு மிளகாய்கள் குவிந்து கிடக்க வேலையாட்கள் அதனை கிளறி விட்டுக் கொண்டிருக்கும் பொழுது உள்ளிருந்து பல எலிகள் சுற்றித் திரியும் காட்சியை வீடியோவில் காண முடிந்தது. அதனுடன், ” எந்த சமையல் என்றாலும் “பாக்கெட் தூள்களை” பயன்படுத்தும் இல்லத்தரசிகளுக்கு இந்த வீடியோவை சமர்பிக்கின்றோம் ” என்ற வாக்கியத்தையும் இணைத்து முகநூலில் Kalai Social Media என்ற முகநூல் பக்கத்தில் 2017 டிசம்பர் 3-ம் தேதி பதிவாகி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவான போஸ்ட் என்றாலும் தற்பொழுது வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பதை காண முடிந்து. இதுவரை 75 ஆயிரம் பார்வைகள், ஆயிரக்கணக்கான ஷேர்களை பெற்று பரவி வருகிறது. அதில், சிலர் போலியான செய்தி என்றும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

ஆகையால், பரவும் வீடியோ குறித்த உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம். வீடியோவில் காய்ந்த சிவப்பு மிளகாய் குவியல் மிகவும் பழையதாகவும், அதனை வேலையாட்கள் காலால் தள்ளி மூட்டைக் கட்டி வைப்பதை பார்க்க முடிகிறது. ஆனால், சுற்றி இருப்பவர்களின் முகங்கள், பேச்சு ஏதுமிலை.

வீடியோவின் தொடக்கம் :

Advertisement

மிளகாயில் எலிகள் இருப்பது குறித்த வார்த்தைகளை பயன்படுத்தி தேடிய பொழுது 2017 நவம்பர் காலக்கட்டத்தில் இதே வீடியோ பல நாடுகளில் பரவி இருந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. Filipinos In Australia என்ற யூட்யூப் சேனலில் 2017 டிசம்பர் 13-ம் தேதி வீடியோ பதிவாகி இருக்கிறது.

2017 நவம்பர் 30-ம் தேதி இந்தோனேஷியாவின் tribunnews என்ற இணையதளம் ஒன்றில் மிளகாய் குவியலில் எலிகள் இருப்பதாக இந்தோனேசிய மொழியில் வெளியாகி இருக்கிறது. எனினும், அதே தளத்தில் 2017 டிசம்பர் 23-ம் தேதி இந்த வீடியோ இந்தோனேசியாவை சேர்ந்தது அல்ல, இந்தியாவில் இதுபோல் வீடியோக்கள் பரவுவதாக குறிப்பிட்டு இருந்தனர்.

இப்படி இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் மிளகாய் குவியலில் எலிகள் இருக்கும் வீடியோ வைரலாகி இருக்கிறது. ஆனால், செய்தியின் தொடக்கம் எங்கிருந்து ஆரம்பித்தது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.

இதுபோன்ற சம்பவம் :

2016 அக்டோபர் மாதம் மலேசியாவில் உள்ள சூப்பர்மார்க்கெட்டில் வைக்கப்பட்டு இருந்த காய்ந்த சிவப்பு மிளகாய் டேங்கில் இரண்டு எலிகள் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியது. இதன் விளைவால் 68 கிலோ மிளகாய்களை அப்புறப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக செய்திகளும் வெளியாகி இருக்கிறது.

இதேபோன்று, 2013 கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் சூப்பர்மார்கெட் ஒன்றில் காய்ந்த சிவப்பு மிளகாய் பாக்கெட்டில் எலிக் குட்டிகள் இருந்ததாக செய்தி வெளியாகி இருக்கிறது.

உணவுப் பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்க வேண்டும். எலிகள் உள்ளிட்ட உயிரினங்களால் உணவுப் பொருட்களில் மனிதர்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முடிவு :

நம்முடைய தேடலில், மிளகாய் குவியலில் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைரலாக வீடியோ. மிளகாயில் எலிகள் இருப்பது உண்மையே, ஆனால் அந்த வீடியோவின் தொடக்கம் எங்கிருந்து என்பதை கண்டறிய முடியவில்லை.

இந்த வீடியோவுடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் மிளகாய், மிளகாய் பவுடர் உடன் தொடர்புப்படுத்தி பகிர்ந்து வருகின்றனர். எதுவாயினும், மக்கள் உணவுப் பொருட்களின் மீது அதீத கவனம் செலுத்துவது சிறந்தது.

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close