இனி துபாயில் ஓட்டுனர் உரிமம் தேர்வை தமிழில் எழுதலாம் !

பரவிய செய்தி
துபாயில் ஓட்டுனர் உரிமம் பெற தமிழில் தேர்வு எழுதலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது .
மதிப்பீடு
சுருக்கம்
இந்திய மொழிகள் தமிழ், மலையாளம், ஹிந்தி, வங்கம் போன்ற மொழிகளை ஓட்டுனர் உரிமம் பெரும் தகுதி தேர்வில் துபாய் அரசு சேர்த்து உள்ளது .
விளக்கம்
துபாயை பொறுத்தவரை அதிக அளவில் ஓட்டுனர்களாக இந்தியர்கள் இருந்து வருகின்றனர் . அவர்களின் ஓட்டுனர் உரிமத்திற்காக நடத்தப்படும் தேர்வில் தமிழ் மட்டும் அல்லாமல் இந்திய மொழிகள் நான்கில் தேர்வு எழுதலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது . இனி தமிழ் , மலையாளம் , ஹிந்தி , வங்கம் , சீன மொழி , ரஷ்யன் , பெர்ஷியன் போன்ற மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் .
நடைமுறை ஓட்டுனர் சோதனைக்கு முன் நடத்தப்படும் கணினி தொடர்பான அறிவு தேர்வில் இதுவரை ஆங்கிலம், அரபிக், உருது போன்ற மொழிகள் இருந்து வந்தன. 2015 செப்டம்பர் முதல் ஏட்டு விரிவுரை வகுப்புகள் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு மொத்தம் உள்ள 11 மொழிகளில் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் .
தேர்வின் போது திரையில் வரும் எழுத்துகளையும் , ஒலி வடிவையும் 11 மொழிகளில் பெறலாம் . தேர்வு எழுதுபவர் திரையில் வரும் வாசகங்களை ஒலி வடிவாக ஹெட்போன் மூலம் கேட்கலாம் .
அவரால் திரையில் வரும் வாசகத்தை புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் ஒலிவடிவின் மூலம் எளிதாக புரிந்து கொண்டு சரியான விடையை அளிக்க முடியும் என்று துபாய் சாலை போக்குவரத்து ஆணையத்தின் ஓட்டுனர் பயிற்சி மற்றும் தகுதி பிரிவின் இயக்குனர் ஆரிப் அல்-மலேக் கூறியுள்ளார் . துபாய் அரசின் இத்திட்டத்தை அங்குள்ள ஓட்டுனர் பயிற்சி வகுப்புகள் வரவேற்றுள்ளன.
ஹிந்தி மொழி அல்லாது இந்திய மொழிகள் தமிழ் , மலையாளம் , வங்கம் போன்ற மொழிகளை ஓட்டுனர் உரிமம் பெரும் தகுதி தேர்வில் சேர்த்து இருப்பதால் அங்குள்ள இந்திய ஓட்டுனர்களுக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது .