This article is from Mar 30, 2022

துபாய் கண்காட்சியில் மோடி ‘மெழுகு சிலை’ எனப் பரப்பும் பாஜக தலைவர் !

பரவிய செய்தி

துபாய் யில் நடைப்பெற்று வரும் துபாய் 2020 கண்காட்சியில்(DUBAI EXPO 2020) இந்தியா அரசு சார்பில் இந்தியாவின் பரிச்சையமான தலைவர் (Familiar leader) பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் மெழுகு சிலை கண்காட்சியில் இடம்பெற்று உள்ளது,அதனை பார்வையிட்டபோது.

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் இந்தியாவிற்காக அமைக்கப்பட்ட அரங்கில் பிரதமர் மோடியின் மெழுகு சிலையானது இந்திய அரசு சார்பில் இடம்பெற்று உள்ளதாக புதுச்சேரியின் உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான நமச்சிவாயம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

உண்மை என்ன ? 

பாஜக அமைச்சர் நமச்சிவாயம் குறிப்பிட்டது போன்று புகைப்படத்தில் இருப்பது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை அல்ல, அது டிஜிட்டல் படம் மட்டுமே.

இந்தியாவின் அரங்கின் ஓர் இடத்தில் தேசியக் கொடி மற்றும் இருக்கை அமைக்கப்பட்டு உள்ளது, அதற்கு எதிராக ” In frame with the prime minister ” என அமைக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் திரையில் பிரதமர் மோடி அமர்ந்து இருப்பது போன்றும் இடம்பெற்று இருக்கிறது.

கண்காட்சியை காண வரும் மக்கள் பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டு உள்ளது. இப்படி டிஜிட்டல் முறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மெழுகு சிலை என தவறாகக் குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

முடிவு : 

நம் தேடலில், துபாய் 2020 கண்காட்சியில் இந்தியா அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலை இடம்பெற்றதாக பாஜக அமைச்சர் நமச்சிவாயம் தவறாகப் பதிவிட்டு உள்ளார், அது டிஜிட்டல் திரை என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader