வாத்துகள் நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதாக திரிபுர முதல்வர் கூறினாரா ?

பரவிய செய்தி
வாத்துக்களால் நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது- திரிபுரா முதல் மந்திரி சொல்கிறார்.
மதிப்பீடு
சுருக்கம்
திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேவ் , சில தினங்களுக்கு முன்பு வாத்துகள் நீந்தும்போது, தானாகவே தண்ணீரை மறுசுழற்சி செய்வதால் மீன்களுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.வாத்து கழிவுகளினாலும் மீன்கள் பயன் அடைகின்றன. இது மீன்களை இயற்கையான முறையில் விரைவாக வளர உதவும். என திரிபுர முதல்வர் கூறி இருந்தார்.
விளக்கம்
மஹாபாரத காலத்திலேயே இன்டெர்நெட் இருந்தது என கூறி பெரிதாக பேசப்பட்டு பிரபலமானவர் திரிபுரா முதல்வர்பிப்லாப் குமார் தேவ். சமீபத்தில் ருத்ரசாகரில் ஒரு படகு பந்தயத்தை தொடங்கி வைக்க சென்ற போது வாத்துகள் நீந்துவதால் தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து மீன்களை பெருக்குகின்றன என பேசியது சமூக வலைத்தளங்களிலும் ஊடங்கங்களிலும் வைரல் ஆனது.
இவர் சொன்னது சாத்தியமா என கேட்டால் ஆம் என்கிறார் இந்திய வனஆராய்ச்சி மற்றும் கல்வி கழகத்தின் விஞ்ஞானி தெபர்மா. “வாத்து-மீன் வளர்ப்பு என்பது ஒருங்கிணைந்த பண்ணை முறையாகும் . வாத்துகளின் கழிவுகள் மீன் வளர்சிக்கு உதவுகிறது. அவை இயற்கையாக காற்று சுழற்சி செய்பவை மற்றும் ஆக்ஸிஜன் அளவு [நீர்வளங்களின்] அதிகரிப்பதில் உதவுகின்றன. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
சிறப்பு பணியில் இருக்கும் தெபர்மாவின் அதிகாரி “சத்தீஸ்கர் மாநிலத்தின் இந்திரா காந்தி வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், வாத்து நீந்தும் போது வளிமண்டல பாஸ்பேட் மற்றும் பிற தாதுக்கள் உருவாகின்றன, இது பச்சை பாசிகள் வளர்ச்சிக்கு உதவுகிறது, இது தண்ணீரில் ஆக்ஸிஜன் உருவாக மூலாதாரமாக அமைகின்றன “ . என்றார்.
FAO (ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு) ஒருங்கிணைந்த மீன்-வாத்து பண்ணையின் நன்மைகளை பட்டியலிடுகிறது. இவை பின்வருமாறு:
- குளத்தின் மேற்பரப்பு முழுவதும் கழிவுகளை வெளியிட்டு உரமளிக்கிறது. வழக்கமான மீன் வளர்ப்பில் கூடுதல் மீன் உணவிற்காக ஆகும் 60 சதவீத தொகையை சேமிக்கிறது.
- வாத்துகள் தண்ணீரை தொடர்ந்து சரிபார்க்க உதவுகின்றன.
- வாத்துகள் குட்டிகளுடன் கீழே நிலத்தில் சென்று மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்களை விடுவித்து, குளத்தின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன.
- வாத்துகள் நீரில் நீந்தும் பொது காற்றினை சுழற்சி செய்கின்றன அதனால் இவை “biological aerators” என்று அழைக்கப்படுகிறது.
இதன் மூலம் திரிபுர முதல்வர் கூறியது சமூக வலைத்தளத்தில் கேலியாக சித்தரிக்கப்பட்டாலும் வாத்துகள் மீன் வளர்ப்பில் நன்மைகளை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவாகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.