எபோலா வைரஸ் பரவும் முன்பே அதைப் பற்றி கார்ட்டூன் நிகழ்ச்சியில் காண்பிக்கப்பட்டதா?

பரவிய செய்தி
2014-ல் மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது தான் எபோலா வைரஸ். ஆனால், 1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட சிம்ப்சன் என்னும் அமெரிக்க கார்ட்டூன் நிகழ்ச்சியில் எபோலா வைரஸ் தாக்கியது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது திட்டமிட்டு செய்ததா, எபோலா வைரஸ் பெரிய சதியா ? என பரவியது .
மதிப்பீடு
சுருக்கம்
உண்மையில் எபோலா வைரஸ் முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு தெற்கு சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் கண்டறியப்பட்டது.அப்போதே ஆராய்ச்சியும் தொடங்கியது. அதை வைத்து தான் நிகழ்ச்சியில் காட்டியுள்ளனர். சிம்ப்சன் கார்ட்டூன் நிகழ்ச்சி வருங்காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை கணிக்கும் தொடர் அல்ல.
விளக்கம்
உலகில் இதுவரை கண்டறிந்த அபாயகரமான ஆட்கொல்லி நோய் எபோலா வைரஸ் தான் என்கிறது உலக சுகாதார அமைப்பு. 1976 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் தான் எபோலா வைரஸ் முதன் முதலில் பரவத் துவங்கியது. ஆப்பிரிக்காவில் எபோலோ என்னும் ஆற்றின் அருகே உள்ள பகுதியில் பரவியதால் எபோலோ வைரஸ் பெயர் ஏற்பட்டது.1970களில் எபோலா வைரஸ் தாக்குதலால் இரு நாடுகளில் மட்டும் சுமார் 400-க்கும் அதிகமானோர் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 1976-ம் ஆண்டிலேயே எபோலாவிற்கு தடுப்பு மருந்தை கண்டறியும் ஆராய்ச்சியிலும் ஈடுபடத் துவங்கினர்.
2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரசால் ஏற்படும் மரணங்கள் மீண்டும் தொடங்கியது. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, 2014-2016-க்கு இடைப்பட்ட காலங்களில் மட்டும் 10,000க்கும் அதிகமானோர் எபோலாவால் இறந்ததாகக் கூறியுள்ளனர்.
பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சுகாதரா நடவடிக்கைகள், விழிப்புணர்வு போன்றவற்றால் எபோலா வைரசால் ஏற்படும் மரணங்கள் தற்போது குறையத் தொடங்கியுள்ளன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது நைஜீரியா நாடு.
1997 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டதாகக் கூறும் சிம்ப்சன் என்னும் அமெரிக்க கார்ட்டூனில் இடம்பெற்ற ஒரு காட்சியில் காண்பிக்கப்படும்புத்தகத்தில் எபோலா வைரஸ் பற்றிய படங்கள் இடம்பெற்றிருந்தாலும், எபோலா வைரஸ் 2014-ம் ஆண்டில் தான் மக்களைத் தாக்கத் தொடங்கியது என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
சிம்ப்சன் கார்ட்டூன் வருங்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கணித்து முன்கூட்டியே தெரிவிக்கும் தொடர் அல்ல. அது நடந்த நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறும் தொடராகும். இதற்கு பின்னால் திட்டமிட்ட செயல் அல்லது சதி போன்ற வேறெதுவும் இல்லை.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரகசியக் குழுக்கள் பற்றி சிம்ப்சன் என்னும் அமெரிக்க கார்ட்டூனில் முன்பே கணிக்கப்பட்டது என்ற வீண் வதந்தியை பரப்பி வந்தவர்கள், தற்போது எபோலா வைரஸ் பற்றிய வதந்தியை பரப்ப தொடங்கியுள்ளனர்.
ட்ரம்ப் சவூதி செல்வது முன்பே கணிக்கப்பட்டதா….
டொனால்டு ட்ரம்ப் அதிபரானது பற்றி simpsons தொடரில்…