This article is from Sep 30, 2018

” woven பாலி புரோப்பிலின் பைகள் ” சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவையா ?

பரவிய செய்தி

“ சுற்றுப்புறச்சூழல் சீராக்குதல் “ (eco friendly) என பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுவழியாக பயன்படுத்தப்படுவது woven Polypropylene pp பைகள். அவை பிளாஸ்டிக்கை விட மோசமானவை. அதில் pp கன்டென்ட் அதிகமாகவும், மறுசுழற்சி செய்வது பிளாஸ்டிக்கை விட கடினமானது. நாம் நினைப்பது போன்று உண்மையில் அவை துணி பை அல்ல.

மதிப்பீடு

சுருக்கம்

eco friendly என்னும் நான் வோவேன் (non-woven) பைகளில் Polypropylene-கள் இருப்பது உண்மையே..!! நான் வோவேன், வோவேன் பைகள் மக்காத பிளாஸ்டிக்( Non-biodegradable plastic) கொண்டு தயாரிக்கப்படுவதாக பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வோவேன் பைககளை eco friendly என பரவிய செய்தியில் தவறாக குறிப்பிட்டு உள்ளனர். எனினும், நான் வோவேன், வோவேன் இரண்டுமே ஒரே தன்மை உடையது. படத்தில் இருப்பது நான் வோவேன் பைகள்.

விளக்கம்

நாடு முழுவதிலும் பல மாநிலங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகள் எடை மற்றும் விலை  மலிவான ஒன்றாக இருப்பதால் அதிகம் பயன்பாட்டில் இருந்தன.

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுவழியை உருவாக்குவதில் பலரும் கவனம் செலுத்தி புது புது பைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், சில காலமாக நான் வோவேன்(non-woven) பைகள் வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வோவேன் மற்றும் நான் வோவேன் பைகள் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வோவென் பைகள் பெரும்பாலும் மண் மூட்டை, அரிசி மூட்டை போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. சணல் பைகளுக்கு மாற்றாக வந்தவை.

நான் வோவேன் பைகள் தயாரிப்பில் வோவெனில் பயன்படுத்திய பொருட்கள் அல்லாமல் பிற பொருட்கள் உபயோகிக்கப்படுகிறது. இதில், லேமினேட் செய்தவை மற்றும் லேமினேட் செய்யாதவை என இரு பைகள் உள்ளன. இவை வோவென் பைகளை விட விலை குறைவானவை. இவை மருந்து பொருட்கள், ஹோட்டல், பல சரக்கு பொருட்கள் போன்றவைகளுக்கு பயன்படுகிறது.

இவ்விரு பைகளிலும் “ பாலி புரோப்பிலின் “ மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதிக வெப்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் பிளாஸ்டிக். இவற்றிக்கு பாலிப்ரோபெனே, பாலி ப்ரோபெனே 25, “ பாலி புரோப்பிலின்( பாலிமர்ஸ்) என சில பெயர்கள் உள்ளன. இவை கடினமானவை அதே நேரத்தில் வளையும் தன்மைக் கொண்டவை.

eco friendly என்னும் நான் வோவேன் (non-woven) பைகளில் Polypropylene-கள் இருப்பது உண்மையே..!! நான் வோவேன் பைகள் மக்காத பிளாஸ்டிக்( Non-biodegradable plastic) கொண்டு தயாரிக்கப்படுவதாக பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“ கேரளாவில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் நான் வோவேன் (non-woven) பைகளின் மீதான தடை நீள்கிறது ”

நான் வோவேன் (non-woven) பைகள் பற்றி டெல்லி ஸ்ரீராம் இன்ஸ்டிட்யூட் ஃபார் இண்டஸ்ட்ரியல் ரிசர்ஸ் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் சுற்றுப்புறச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதாக அறிவியல் ரீதியான ஆதாரங்களை தெரிவித்துள்ளனர்.

“ இயற்கை ஆர்வலர்கள் நான் வோவேன் பைகள் சந்தையில் விற்பனை ஆனதை அடுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். பருத்தி துணியை போன்று ஒத்திருக்கும் நான் வோவேன் பைகள் இயற்கையால் சிதைக்கப்படாதவை என்பதால் சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் என இன்ஸ்டிட்யூடில் தெரிவித்துள்ளனர் “

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றுவழி எனக் கூறி விற்பனை செய்யப்படும் “ நான் வோவேன் துணி பைகள் “ என்பவை பல பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் போன்று இவற்றாலும் பாதிப்புகள் உண்டாகும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிப்பதால் அவற்றிக்கு மாற்றாக பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய மஞ்சப்பை போன்ற துணி பைகளை பயன்படுத்துவது சுற்றுச்சூழலிற்கு நன்மை விளைவிப்பதோடு, பார்ப்பவர்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கும்..

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader