This article is from Jul 05, 2020

எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ குனிந்து வணங்குவதாக பரவும் தவறான புகைப்படம் !

பரவிய செய்தி

வாழ்க்கையும் பதவியும் நிலையானது அல்ல என்பதை இந்த படத்தை பார்த்து உணர்வோம்

Facebook link | archive link 1 | archive post 2

மதிப்பீடு

விளக்கம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக கட்சியிலும், தமிழக முதல்வர் பதவிலும் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக நீடித்து வரும் நிலையில் அவரும், அமைச்சர் ஜெயக்குமாரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்பாக குனிந்து வணங்கும் பழைய புகைப்படம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்பட்டு வரும் புகைப்படத்தில் ” Getty image ” என புகைப்பட தளத்தின் பாதி பெயர் இருப்பதை காணலாம். புகைப்படத்தை கட் செய்து பகிர்ந்து உள்ளார்கள் என புரிந்து கொள்ள முடிகிறது. ஆகையால், அந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2016 டிசம்பர் மாதம் ” ஜெயாவின் ஆட்சிக்காலம் பெண்களின் பொற்காலமா? ” என பிபிசி தமிழில் வெளியான கட்டுரையில் முழுமையான புகைப்படம் இடம்பெற்று உள்ளது.

ஓபிஎஸ் அருகில் அமர்ந்து இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் வணங்கும் புகைப்படத்தில் ஜெயலலிதா பகுதியை நீக்கி விட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

முடிவு : 

நமது தேடலில், எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் ஆகியோர் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களை குனிந்து வணங்குவதாக பகிரப்படும் புகைப்படம் தவறானது. அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறார்கள் என அறிய முடிகிறது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader