This article is from Jun 27, 2018

தலையின் பின்பிறத்தில் முகம்: 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிசய மனிதனா ?

பரவிய செய்தி

19-ம் நூற்றாண்டில் Edward Mordrake என்ற பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்தவர் பிறக்கும் பொழுதே விசித்திரமாக, தலைக்கு பின்புறம் மற்றொரு முகத்துடன் பிறந்துள்ளார். மருத்துவ உலகில் இது ஒரு அரிதான நிகழ்வு. இவர் தனது 23வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

மதிப்பீடு

சுருக்கம்

Edward Mordrake என்ற பெயரில் அருங்காட்சியம் ஒன்றில் மெழுகு சிலை ஒன்று உள்ளது. அதன் படத்தை கருப்பு வெள்ளை புகைப்படமாக மாற்றியுள்ளனர். அதைப் பற்றி விரிவாக காண்போம்.

விளக்கம்

Edward Mordrake 19-ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் நாட்டில் வாழ்ந்த செல்வந்தர் ஆவார். இவருக்கு தலையின் பின்புறம் மற்றொரு முகமானது பிறக்கும் பொழுதே இருந்துள்ளது. இரண்டில் ஏதேனும் ஒன்றில் சாப்பிடவோ அல்லது பேசுவோ முடியும். அதே போல் அழுவதோ அல்லது சிரிக்கவோ முடியும். Edward தன் தலையில் பேய் உருவம் போன்று உள்ள மற்றொரு முகத்தை நீக்குமாறு மருத்துவர்களிடம் வேண்டியுள்ளார். அதற்கு காரணம், இரவு நேரங்களில் பயமுறுத்தும் வகையில் சத்தம் எழுப்புவது அச்சத்தை உருவாக்குவதால் நீக்க கூறியதாக கூறப்படுகிறது. ஆனால், எந்தவொரு மருத்துவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகையால், தனது 23வது வயதில் தற்கொலை செய்து கொண்டார்.

இக்கதையுடன் இரு முகங்கள் கொண்டவரின் படங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி 2000-ம் ஆண்டில் இருந்தே செய்திகள், பாடல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல வழிகளில் வைரலாகியவை. இது குறித்து முதன் முதலில் 1895-ல் Gould and Pyle’s Anomalies and Curiosities of Medicine  என்ற தலைப்பில் வெளியான புத்தகத்தில் Edward Mordrake பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால், இவையும் Edward Mordrake-ன் “ lay source “ இல் இருந்து எடுக்கப்பட்டவை.

இரட்டை குழந்தைகள் பிறப்பது இயல்பானது. ஆனால், இரு கருக்கள் ஒன்றாக இணைந்து இரு தலையுடன், நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் பிறப்பது அல்லது இரு உடலுடன் ஓட்டிப் பிறப்பது அரிதாக காணப்படுகிறது. அதிலும், இது போன்ற ஒட்டி பிறகும் குழந்தைகள் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் இணைந்தே வாழ்ந்து வருகின்றனர். Edward Mordrake கதையில் கூறியது போன்று மருத்துவத் துறையில் உடல்கள் இணைந்து பிறந்த குழந்தைகளை பிரிக்க இயலவில்லை என்றாலும், அவர்களும் இணைந்தே வாழ்வதை சாத்தியமாக்கியுள்ளனர்.

1895 டிசம்பரில் Gould and Pyle’s புத்தகத்தில் வெளியாவதற்கு முன்பாகவே, 1895-ல் Edward Mordrake பற்றி கட்டுரையாக அமரிக்காவின் செய்தித்தாளில் கவிஞர் மற்றும் கற்பனை எழுத்தாளர் சார்லஸ் லோடின் ஹில்ட்ரேத் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. ஹில்ட்ரேத் கதையை வாசிக்கும் ரசிகர்களுக்கு கற்பனை கதாபாத்திரத்தை நிஜத்தில் காண்பிக்கும் வகையில் அவரது கதைகளில் படங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஹில்ட்ரேத் கதையில் இருக்கும் மனித உடல் அமைப்பு கொண்ட நண்டு, மீன் பெண், பேய் இரட்டையர்( Edward Mordrake ) போன்ற கதாப்பாத்திரங்களை வரைந்து வாசிப்பவர்களுக்கு சுவராசியத்தை கூட்டியுள்ளார்.

Edward Mordrake-வின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் “ Devil Twin ” என 2007 ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பதிவிட்டவர் யார் என்று தெரியவில்லை. இந்த புகைப்படம், ஜெர்மனியின் ஹம்பர்க்-ல் உள்ள Panoptikum Wax museum-த்தில் வைக்கப்பட்ட மெழுகு சிலையின் தோற்றமே. அதை கருப்பு வெள்ளையில் மாற்றி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இறுதியாக Edward Mordrake சார்லஸ் லோடின் ஹில்ட்ரேத்தால் உருவாக்கப்பட்ட கற்பனையான இலக்கிய படைப்புமட்டுமே என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader