முட்டை, வாழைப்பழம் விஷமாக மாறி உயிரைப் பறிக்குமா ?

பரவிய செய்தி

எச்சரிக்கை, முட்டை மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட இளைஞர் அதே இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். முட்டை, வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் அது வயிற்றில் விஷமாக மாறி உடனடியாக உயிரை பறித்து விடும். இந்த தகவலை உடனடியாக அனைவருக்கும் பகிரவும்.

மதிப்பீடு

சுருக்கம்

முட்டை மற்றும் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டு யாரும் உயிரிழந்ததாக எந்தவொரு தகவலும் இல்லை.

விளக்கம்

வீன உலகில் உண்ணும் உணவில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும், பழங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர். அதில், வாழைப்பழம், முட்டை போன்றவை குழந்தைகள் முதல் அனைவரும் உண்ணக் கூடியவை. இவ்விரண்டிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனினும், சத்துக்கள் நிறைந்த இரண்டையும் ஒன்றாக உண்டால் உடலுக்கு ஆபத்து என்ற ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertisement

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இணையதளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், இளைஞர் ஒருவர் முட்டை மற்றும்வாழைப்பழத்தை உண்டதால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இளைஞரின் மரணம் குறித்து ஆராய்ந்ததில் முட்டை மற்றும் வாழைப்பழத்தின் கலவை வயிற்றில் விஷமாக மாறியது என்று தெரிவித்துள்ளார்கள். எனவே, முட்டை மற்றும் வாழைப்பழத்தை யாரும் உண்ண வேண்டாம், இச்செய்தியை அனைவருக்கும் விரைவாக பகிருங்கள் என்று கூறி பல ஆயிரம் ஷேர் செய்யப்படுகிறது.

பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதில், வைட்டமின் C மற்றும் B6 , கொழுப்பு, நார் சத்துக்கள் அடங்கியுள்ளன. முட்டையில் கால்சியம், பாஸ்பரஸ், கொழுப்பு, ப்ரோட்டீன் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளன. இவ்வாறு அதிக சத்துகளை கொண்ட இரு உணவு பொருளும் இணைந்தால் விஷமாக மாறும் என்றுக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதவை. மேலும், முட்டை மற்றும் வாழைப்பழத்தை உண்டதால் இளைஞரோ அல்லது வேற யாரோ இறந்ததற்கான எந்தவொரு நம்பத்தகுந்த செய்தியும் வெளியானதில்லை. இது மாதிரியான மரணம் தொடர்பாக மருத்துவத்துறையில் எந்தவொரு ஆவணங்களும் இல்லை. ஆகையால், இது போன்ற வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

அதுமட்டுமின்றி, முட்டை மற்றும் வாழைப்பழத்தை பயன்படுத்தி பல உணவு வகைகள், இனிப்புகள் போன்றவை தயரிக்கப்படுகின்றனர். உதாரணமாக, banana pancakes, Banana scrambled eggs போன்றவை. மேலும், பல ஆண்டுகளாக மக்கள் முட்டையையும், வாழைப்பழத்தையும் உண்டு வருகிறார்கள், அவர்களுக்கு விஷப் பாதிப்புகள் உண்டானதாக எந்தவொரு நபரும் சிகிச்சை பெற்றது இல்லை. எனினும், அதிகளவில் முட்டை, வாழைப்பழம் தொடர்ந்து உண்டால் ஒருசில உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இவை உடல் நலத்திற்கு உகந்தது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல், உடலுக்கு ஏற்ற அளவிற்கு முட்டை மற்றும் வாழைப்பழத்தை உண்டு வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க பெறும்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் உணவு முறைகள், உணவு பொருட்கள் குறித்து பகிரப்படும் எந்தவொரு பதிவையும் எளிதில் உண்மையென்று நம்பி யாரும் பகிர வேண்டாம்.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
ஆதாரம்

The Myths of Eggs, Potatoes and bananas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button