தீக்காயத்திற்கு முட்டையின் வெள்ளைக்கரு பயனளிக்குமா ?

பரவிய செய்தி

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா ? மருந்தை தேடி அலைய வேண்டாம்..!! தீக்காயம் பட்ட உடன் உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்.. பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்.. சிறுது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும். தொடர்ந்து செய்து வந்தால் அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.. விழிப்புணர்வு செய்யுங்கள் !! நன்றி

மதிப்பீடு

சுருக்கம்

தீக்காயங்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு காயத்தை குணப்படுத்துவதொடு தழும்பையும் மறைய வைக்க முடியும் என்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைகள் இருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

விளக்கம்

முட்டையின் வெள்ளைக் கருவைக் கொண்டு தீக்காயத்தை குணமடையச் செய்ய முடியும் என்ற தகவல் புதிதாக வாட்ஸ் ஆஃப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

தீக்காயங்களில் சிறிய அளவிலான காயங்களுக்கு வீட்டிலே முதலுதவி செய்து காயங்களை குணப்படுத்தும் செயல் முறைகளில் முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு எளிதாக குணப்படுத்த முடியும் என்றும், அத்தகைய வழிமுறை தீயணைப்பு படையினரால் கையாளப்படுகிறது என ஆதாரமற்ற தகவல்கள் மக்களால் எளிதில் நம்பப்படுகிறது.

திடீரென ஏற்படும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் பலதரப்பட்ட எண்ணெய், மாவு மற்றும் வீடுகளில் இருக்கும் முட்டையின் வெள்ளைக் கரு உள்ளிட்ட சில பொருட்களை பயன்படுத்தி முதலுதவி செய்வது இயல்பான ஒன்றாக இருந்தாலும் அது நீண்ட நேரத்திற்கு பயன் அளிக்காது. கடுமையான தீக்காயங்களுக்கான சிகிச்சையில் விலங்கு கொலாஜன் பயன்படுத்தப்படுகின்றன. முட்டை வெள்ளைக்கரு கொலாஜனைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை பறவை கொலாஜன் விலங்கு கொலாஜன் போன்று இல்லை. அது தீக்காயங்களுக்கு ஏற்றதல்ல.

குளிர்ந்த நீரை தீக்காயங்களில் ஊற்றி குளிர வைக்க வேண்டும் என கூறும் முறையை மருத்துவ தரப்பிலும் கூறப்படுகிறது. மயோ கிளினிக் மற்றும் அமெரிக்கன் ரெட் கிராஸ் சிறிய தீக்காயங்களுக்கு சிகிச்சை பற்றி கூறியதில், “ குளிர்ந்த நீரைக் காயத்தில் விட வேண்டும், அதன் மீது காய்ந்த துணியினைக் கொண்டு லேசாக சுற்றி வைக்க வேண்டும் “ என அனைவராலும் செய்யக் கூடியதை அறிவுறுத்தி உள்ளனர்.

” தீக்காயங்களில் தகுந்த சிகிச்சை மருந்துகள் இன்றி எதையாவது பயன்படுத்தி சிகிச்சை அளித்தால் பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என மருத்துவத் தரப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன ”

தீக்காயங்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை கொண்டு காயத்தை குணப்படுத்துவதொடு தழும்பையும் மறைய வைக்க முடியும் என்பதற்கு மருத்துவர்கள் பரிந்துரைகள் இருப்பதாக ஆதாரங்கள் இல்லை.

குறிப்பாக, தீயணைப்பு வீரர்களால் மீட்பு பணிகளில் தீக்காயங்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி வருவதாக கூறுவது போன்று எதுவும் நடைபெறுவதில்லை..!!!

Please complete the required fields.
ஆதாரம்

Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close