EIA குறித்து பேசிய பெண்ணுக்கு ஆசிட் வீச்சு என பரவும் பழைய விழிப்புணர்வு வீடியோ !

பரவிய செய்தி
இந்தப் பெண்ணை ஞாபகம் இருக்கிறதா? பிஜேபி கல்யாணராமன் முகவரி கேட்டு ட்விட் போட்டான்.பின் தற்போது ஆசிட் அடிக்கப்பட்டுள்ளது.எந்த ஊடகச் செய்தியும் வரவில்லை
இந்தப் பெண்ணை ஞாபகம் இருக்கிறதா? பிஜேபி கல்யாணராமன் முகவரி கேட்டு ட்விட் போட்டான்.பின் தற்போது ஆசிட் அடிக்கப்பட்டுள்ளது.எந்த ஊடகச் செய்தியும் வரவில்லை pic.twitter.com/1NqGYLV3ht
— Tambaram Jeyakumar (@jaikumar0431974) August 18, 2020
மதிப்பீடு
விளக்கம்
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து பேசிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகியது. அப்பெண்ணின் வீடியோ வைரலானதால் அவரின் செல்போன் எண், முகவரி கேட்டு பாஜக ஆதரவாளராக காட்டிக் கொள்ளும் கல்யாண் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகியது. EIA குறித்து பேசிய பெண் மிரட்டப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி செய்திகள் வரை சென்றன.
இந்நிலையில், அப்பெண்ணின் முகத்தில் ஆசிட் அடித்துள்ளதாகவும், பாஜக ஆதரவாளர் கன்னம் பழுக்க அரைவிட்டதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து பதிவிடுமாறு ஃபாலோயர்கள் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
EIA குறித்து பேசிய பெண் ” சென்னை தமிழச்சி ” எனும் பெயரில் யூடியூப் சேனல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கம் போன்றவை பயன்படுத்தி வருகிறார். அவருக்கு ஆசிட் அடிக்கப்பட்டதாக வைரல் செய்யப்படும் வீடியோ கடந்த ஆண்டு ஆசிட் வீச்சு குறித்து விழிப்புணர்விற்காக வெளியான வீடியோவாகும்.
சென்னை தமிழச்சி எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 43 வாரங்களுக்கு முன்பாக விழிப்புணர்வு வீடியோ என்கிற தலைப்பில் வெளியான 2.24 நிமிட வீடியோவில் இருந்து குறிப்பிட்ட பகுதி மட்டும் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பொது இடத்தில் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்களுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி இவ்வீடியோ வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாகவே இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Very old video , see instagram https://t.co/PxCeEGB1mo pic.twitter.com/IRMHBPVcyY
— மனதின்குரல் 🖤❤️💙 (@s0undofsoul) August 18, 2020
முடிவு :
நம் தேடலில், EIA குறித்து பேசிய பெண் மீது ஆசிட் வீசியதாக, கன்னம் பழுக்க அடித்ததாக வைரலாகும் வீடியோ ஆசிட் வீச்சு தொடர்பான கடந்த ஆண்டு வெளியான விழிப்புணர்வு வீடியோவே என அறிய முடிந்தது.