This article is from Sep 22, 2018

ஐன்ஸ்டினை நிராகரித்ததா பெர்ன் பல்கலைக்கழகம் ?

பரவிய செய்தி

1907 ஆம் ஆண்டில் பெர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்யை நிராகரிக்கும் கடிதம். உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியே நிராகரிக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது. தற்போது இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதிப்பீடு

விளக்கம்

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் விண்ணப்பத்தை பெர்ன் பல்கலைக்கழம் நிராகரித்து கடிதம் ஒன்றை வெளியிட்டதாகக் கூறி 2016-ல் இருந்து இந்த கடிதம் சமூக வலைத்தளம், இணையப் பக்கங்களில் விவாதத்துக்குரியதாகவும், ஆச்சரியத்துடனும் பேசப்படுகிறது.

அக்கடிதத்தில், “ உங்களின் Doctorate விண்ணப்பம் தற்போது வெற்றிகரமாக இல்லை மற்றும் உதவி பேராசிரியர் பதவிக்கு நீங்கள் பொருத்தமற்றவர்.

“ Annalen der physik “ என்ற கட்டுரையில் சுவராசியமான கோட்பாட்டை நிலை நிறுத்தி உள்ளீர்கள். உங்கள் முடிவில் கூறியுள்ள nature of light and fundamentals connection between space and time ஆகியவற்றில் சிறிதளவே அடிப்படைக்கூறு இருப்பதாக உணர்கிறோம். உங்களின் யூகங்கள் உண்மையான இயற்பியலில் இருந்து அதிக கலையாற்றல் கொண்டதாக நாங்கள் கண்டறிந்துள்ளோம் ” என்று இடம்பெற்றுள்ளன.

1907 ஆம் ஆண்டு பெர்ன் பல்கலைக்கழகத்தால் ஐன்ஸ்டினின் Doctorate விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக அக்கடிதத்தில் கூறப்படுகிறது. ஆனால், 1905-ம் ஆண்டிலேயே University of Zurich-ல் PhD பட்டம் பெற்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இரு வருடங்களுக்கு முன்பே PhD பட்டம் பெற்ற ஐன்ஸ்டீன் பெர்ன் பல்கலைக்கழகத்தில் Doctorate மற்றும் Assistant Professor ஆக விண்ணப்பிக்க அவசியம் உண்டா !!

இக்கடிதம் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ளது. பெர்ன் பல்கலைக்கழகம் அமைந்து இருப்பது சுவிட்சர்லாந்தில் மற்றும் அங்கு முதன்மையான மொழியாக இருப்பது ஜெர்மன் ஆகும். ஜெர்மனியை சேர்ந்த ஐன்ஸ்டீன் ஜெர்மன் மொழியில் நன்றாக பேசக் கூடியவர். ஜெர்மன் மொழியை நன்கு அறிந்தவருக்கு ஆங்கில மொழியில் கடிதம் அனுப்ப அவசியம் ஏன். மேலும், இன்றும் சுவிட்சர்லாந்தில் அதிகாரப்பூர்வமாக நான்கு மொழிகள் உள்ளன. அதில் ஆங்கிலம் இல்லை.

அடுத்து கடிதத்தில் கீழே “ Dean of Science “  என்றுக் கூறி Wilhelm Heinrich என்ற பெயர் மற்றும் சீல் இடம்பெற்று இருக்கும். பெர்ன் பல்கலைக்கழகத்திற்கும் அந்த சீல்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை, Wilhelm Heinrich  “ university of Bern” உடைய dean அல்ல. மேலும், Dean of Science என்று குறிப்பிட்டு உள்ளனர் 1907-ல் Dean of Science என்று ஏதுமில்லை. 1907-ல் இருந்து தற்போது வரை Faculty of science and Faculty of Humanities என்று தனியாக பிரிந்து இல்லை.

இறுதியாக, கடிதத்தின் முழு புகைப்படத்தில் ஐன்ஸ்டீன் படம் இடம்பெற்ற அமெரிக்காவின் தபால்தலைஇடம்பெற்றுள்ளது. ஐன்ஸ்டின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை அமெரிக்கா 1966 ஆம் ஆண்டில் தான் வெளியிட்டது. அதுவும் 8 சென்ட் ஸ்டாம்ப் ஆகும், 25 சென்ட் ஸ்டாம்ப் அல்ல.

ஆக, கடிதத்தில் இருக்கும் ஒரு செய்தி கூட உண்மையாக இல்லை. மேலும், கடிதத்தில் இடம்பெற்ற எழுத்துக்களில் தற்கால ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஆகையால், இந்த கடிதத்தை இயற்பியல் மீது ஆர்வமற்ற ஒருவர் மாணவன் செய்திருக்கக்கூடும் என்றும் கூட கூறலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி தவறான செய்தியை பரப்ப போலியான செய்திகள் அடங்கிய கடிதத்தை தயார்படுத்தி உள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader