இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !

பரவிய செய்தி

எனக்கு பின்னால் இருக்கும் இலந்தை பழம் மரம் 2000 ஆண்டுகள் பழமையானது. இது ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ளது.

elantha pazham tree life

Archive link 

மதிப்பீடு

விளக்கம்

மிழக பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், ” எனக்கு பின்னால் இருக்கும் இலந்தைப் பழம் மரம் 2000 ஆண்டுகள் பழமையானது. இது ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் அமைந்துள்ளது ” எனக் கூறி தன்னுடைய புகைப்படத்தை பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலையை டக் செய்து பதிவிட்டு இருக்கிறார்.

Facebook link 

அமர் பிரசாத் பதிவிட்ட படம் மற்றும் இலந்தைப் பழம் குறித்த தகவலை பாஜகவைச் சேர்ந்தவர்களும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை என்ன ? 

அமர் பிரசாத் கூறியதுபடி இலந்தைப் பழ மரமானது 2000 ஆண்டுகள் வரை வாழக்கூடியதா எனத் தேடுகையில், ” பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலில் உள்ள இலந்தைப் பழ மரம் (Ber or Jujube Tree) 440 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இலந்தை மரம் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழக்கூடியது என அறிவோம். ஆனால், இந்த மரங்கள் பதிவு செய்யப்பட்ட ஆயுட்காலத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வாழ்ந்துள்ளன ”  என 2013ம் ஆண்டு ஜே.எஸ் பால் மற்றும் டி.ஆர். சர்மா, பி.சிங் ஆகியோர் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

elanthai pazham amar prasad

இதுகுறித்து வேளாண் ஆராய்ச்சியாளர் ஜி.கே தினேஷ் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுகையில், ” இலந்தை மரங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. சில மரங்கள் 500 ஆண்டுகள் வரை கூட வளரக்கூடியவை ” எனத் தெரிவித்து இருந்தார்.

உலகின் பழமையான உயிர் வாழும் மரமாக bristlecone pines கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து இருக்கிறது. அதன் வயது 4,800 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், இராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவிலில் உள்ள இலந்தைப் பழ மரம் 2000 ஆண்டுகள் பழமையானது என பாஜகவின் அமர் பிரசாத் பதிவிட்டது தவறான தகவல். இலந்தை பழ மரங்கள் 100 ஆண்டுகள் வாழக்கூடியது. சில மரங்கள் அதிகபட்சமாக சுமார் 500 ஆண்டுகள் வரை வாழக்கூடியது என அறிய முடிகிறது.

Please complete the required fields.
ஆதாரம்

Back to top button
loader