எலிசபெத் ராணி, சீமான் வைத்துப் பரப்பப்படும் நையாண்டி அறிவிப்பை பகிர்ந்த துக்ளக் குருமூர்த்தி

பரவிய செய்தி

மாண்புமிகு மகாராணி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீமான் என்ற நபருக்கும் எலிசபெத் மகாராணிக்கும் எந்த தொடர்பும் இல்லை அல்லது அவரை சந்தித்ததும் இல்லை என்பதை இதன் மூலம் உறுதி அளிக்கிறோம். எதிர்காலத்தில் மகாராணி மற்றும் அரச ராஜ்ஜியத்துடன் தொடர்புப்படுத்தி அவர் எதாவது கதைகள் சொல்வார்.

Twitter link | Archive link 

மதிப்பீடு

விளக்கம்

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணம் அடைந்ததாக செய்திகள் வெளியாக தொடங்கிய பிறகு, ராணி எலிசபெத் அவர்களின் உயிர் பிரிவதற்கு முன்பாக அவருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே எந்த சந்திப்பும் நிகழ்ந்தது இல்லை எனத் தெரிவித்து விட்டு சென்றதாக அரச தொடர்பு தரப்பில் அறிவிப்பு வெளியானதாக இப்படம் சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டது. இதை துக்ளக் குருமூர்த்தியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

உண்மை என்ன ? 

செப்டம்பர் 8ம் தேதி தி ராயல் பேமிலியின் ட்விட்டர் பக்கத்தில், ” ராணி எலிசபெத் மரணம் தொடர்பாக அரசர் தரப்பில் வெளியான அறிக்கையே வெளியிடப்பட்டு இருக்கிறது. ” Royal communication ” எனும் தலைப்பில் வேறு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

Twitter link 

வைரல் செய்யப்படும் அறிவிப்பை பார்த்தாலே, அது சீமானுக்காக நையாண்டிக்காக எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார்கள் என புரிந்து கொள்ள முடியும். இந்த போலியான அறிவிப்பை மையமாக வைத்து சீமானை வைத்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சீமானை ட்ரோல் செய்ய வேண்டும் என்பதற்காக இணையத்தில் உள்ள ” Royal communication ” உடைய அறிவிப்பு ஒன்றை எடுத்து எடிட் செய்து நையாண்டிக்காக தவறாகப் பரப்பி வருகிறார்கள்.

எனினும், சீமான் பற்றிய நையாண்டிப் பதிவை துக்ளக் குருமூர்த்தி நையாண்டி எனத் தெரிந்தே பகிர்ந்தாரா அல்லது உண்மை என நினைத்து பகிர்ந்தாரா என உறுதியாக தெரியவில்லை. அவருடைய பதிவும் தற்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் சீமானை சந்தித்ததில்லை என அரச தொடர்பு தரப்பில் வெளியிட்டதாக பரப்பப்படும் அறிவிப்பு நையாண்டிக்காக எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

Please complete the required fields.




Back to top button
loader