இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் விழா என கனடா வீடியோவை தவறாக வெளியிட்ட சத்தியம் டிவி !

பரவிய செய்தி

இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து நடத்திய தமிழர் திருநாள் பொங்கல் விழாவில் வாழை இலையில் ரசித்து உண்ணும் காட்சி.

Video link| Archive link 

மதிப்பீடு

விளக்கம்

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புத் துறை இணைத்து அந்நாட்டுக் காவல் துறையினருக்கும், அதிகாரிகளுக்கும் வாழை இலை விருந்து அளித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பரப்பி வருகின்றனர்.  

 

Twitter link | Archive link

இதே வீடியோவை சத்தியம் தொலைக்காட்சி “வாழை இலையில் அறுசுவை உணவு…பொங்கல் விழாவைக் கொண்டாடிய இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

உண்மை என்ன ? 

அவ்வீடியோவின் உண்மைத் தன்மை குறித்துக் கண்டறிய ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து கூகுள் ரிவேர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடினோம். ‘Megh Updates’ என்ற டிவிட்டர் பக்கத்தில் பரவக் கூடிய வீடியோ பதிவிடப்பட்டு, அதிலும் “இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் பொங்கல் / மகர சங்கராந்தி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Archive link 

அப்பதிவினை Champak Bhoomia’ என்ற டிவிட்டர் பக்கம் ரீடிவீட் செய்து “இது போலியானது” எனக் கூறியுள்ளார். மேலும் அப்பதிவில், இது கனடாவில் வாட்டர்லூ (Waterloo) நகரில் உள்ள தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழாவில் அந்நகர மேயர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்ட வீடியோ எனக் கூறி ‘பேஸ்புக் லிங்க்’ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த பேஸ்புக் பக்கத்தில், பரவக் கூடிய வீடியோ ஜனவரி 15ம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதில், வாட்டர்லூ பகுதி தமிழ்ச் சங்கம் நடத்திய  பொங்கல் விழாவில் அப்பகுதி அரசியல் வாதிகள், நகர மேயர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடியோவில் உள்ள அனைவரது பெயரினையும் வேறொரு பதிவில் அப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் Kitchener பகுதி மேயர்  ‘Berry Vrbanovic’ தனது டிவிட்டர் பக்கத்தில்  இப்பொங்கல் விழா குறித்து வேறு சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

Archive link 

இதிலிருந்து இந்நிகழ்வு கனடாவில் உள்ள தமிழ்ச் சங்கம் நடத்திய பொங்கல் விழா என்பதையும், அதில் நகர மேயர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது. 

முடிவு : 

நம் தேடலில், இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மற்றும் பாதுகாப்புத் துறை இணைந்து நடத்திய பொங்கல் விழா என சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ கனடா வாட்டர்லூ தமிழ் சங்கத்தினரால் நடத்தப்பட்ட பொங்கல் விழா என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader