எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொண்டதாகப் பரவும் வதந்திகள் !

பரவிய செய்தி

கடும் முட்டி வலியுடன் தவழ்ந்தே அயோத்திக்கு வந்த சிலுவம்பாளையம் சில்ற பைய.. இப்டி ஒரு பிறவி அடிமை பயல உலகத்துல எங்கயும் பாக்க முடியாது..

Twitter Link | Archive Link

மதிப்பீடு

விளக்கம்

அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமியும் இவ்விழாவில் கலந்து கொண்டதாகக் கூறி, அவர் அயோத்தி விழாவில் கலந்துகொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்பதை அறிய முடிந்தது.

மேலும் தேடியதில், இன்று கன்னியாகுமரியில் உள்ள “சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமை பதி” என்ற கோவிலுக்கு பழனிச்சாமி வந்துள்ளதையும், அதன் நேரலை NewsJ யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதையும் காண முடிந்தது.

மேலும் பரவி வரும் புகைப்படம் குறித்து தேடியதில், இன்று அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை Zee news வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிந்தது.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம், பழனிச்சாமி உள்ளது போன்று எடிட் செய்யப்பட்டு தவறாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தவறான தகவல்!

மேலும் படிக்க: 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !

முடிவு:

நம் தேடலில், எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொண்டதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

Please complete the required fields.




Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader