2020ல் எடுத்த வயதான பாட்டி அரசைக் கேள்வி கேட்கும் வீடியோவை திமுக ஆட்சி எனப் பொய் பரப்பும் அதிமுகவினர் !

பரவிய செய்தி
விழித்துக்கொண்ட ஈரோடு மக்கள். ரூ1000 வாங்கினியே என்றதற்கு அந்த பாட்டியோட பதில்… விடியலின் சாதனை பட்டியலை விளக்கிய பாட்டி…..,.சபாஷ்…
மதிப்பீடு
விளக்கம்
மூதாட்டி ஒருவரிடம் அரசு ரூ.1000 வழங்கியது தொடர்பாகக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அவர், “அது யாருடைய பணம்? நாம் செலுத்தும் வரிப்பணம்” எனப் பதிலளிக்கிறார். இந்த வீடியோவை அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து திமுக ஆட்சியை விமர்சித்து இருக்கிறார்.
விடியல் அரசின் அவலம் ! pic.twitter.com/uuo183tgSF
— Sankar Ndt (@sankar_ndt) January 31, 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விழித்துக்கொண்ட ஈரோடு மக்கள். ரூ1000 வாங்கினியே என்றதற்கு அந்த பாட்டியோட பதில்… விடியலின் சாதனை பட்டியலை விளக்கிய பாட்டி…..,.சபாஷ்…👏👏👏👏#பல்லிளிக்கும்விடியல் #420திமுக #திமுககேடுதரும்@annamalai_k @apmbjp @bjp4kovai pic.twitter.com/TgykMujVAY
— Nagarajspk BJP TAMIL NADU (@NagarajspkIt) January 31, 2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் நிலையில், இவ்வீடியோ ஈரோடு பகுதியில் எடுக்கப்பட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில், “ஈரோடு மக்கள் விழித்துக் கொண்டார்கள்” எனக் குறிப்பிட்டு பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன ?
கோவை சத்யன் பதிவிட்ட வீடியோ கீ ஃபிரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். அவ்வீடியோவை ‘முஹம்மது யூனுஷ்’ என்பவர் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரி பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே! pic.twitter.com/UouScHFgt4
— Muhamed Yunush (@yunustrichy) April 28, 2020
அதில், “எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரிப் பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே!” என அதிமுக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
பழனிசாமி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரி பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே pic.twitter.com/TjYRmibOvg
— Rajesh Dmk (@Rajesh02583490) April 28, 2020
அன்றைய தேதிகளில் இதே வீடியோவினை முஹம்மது யூனுஷ் பதிவிட்ட அதே வாசகங்களுடன் அதிமுகவை விமர்சிக்கும் வகையில் திமுகவைச் சேர்ந்தவர்களும் பதிவிட்டுள்ளனர்.
2020ம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக. அக்காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவினை திமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது போல ஒரு தவறான தகவலை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
மேலும் படிக்க : முதல்வரின் கொளத்தூர் தொகுதி அலுவலகம் முன்பு தண்ணீர் தேங்கியதாகப் பழைய படத்தைப் பரப்பும் அதிமுக, பாஜகவினர் !
இதேபோல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கொளத்தூர் தொகுதி அலுவலகத்தின் முன்பாக மழைக் காலத்தில் தண்ணீ தேங்கி இருந்ததாக 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, 2022 நவம்பர் மாதத்தில் நிகழ்ந்தது போல கோவை சத்யன் பதிவிட்டிருந்தார். அதன் உண்மைத் தன்மை குறித்து ‘யூடர்ன்’ கட்டுரை வெளியிட்டது.
முடிவு :
நம் தேடலில், மூதாட்டி ஒருவர் 1000 ரூபாய் அரசிடம் இருந்து பெற்றதாகவும், அது குறித்து விமர்சித்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ 2020ம் ஆண்டே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதில் இருந்து அவ்வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்பதையும், 2020ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது அதிமுக என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.