ஈரோடு கிழக்கில் ஓட்டுக்காக கொடுத்த குக்கர் வெடித்ததாக தவறாகப் பரப்பப்படும் கர்நாடகா விபத்து !

பரவிய செய்தி
மதிப்பீடு
விளக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரங்கள் ஒருபுறம் இருக்க வாக்காளர்களுக்குப் பணம், குக்கர், கொலுசு போன்ற பொருட்கள் கொடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வருகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் வாக்காளர்களுக்கு குக்கர் கொடுப்படுவதாக பரவும் வீடியோ! pic.twitter.com/SnTgfPidPc
— @JuniorVikatan (@JuniorVikatan) February 20, 2023
#Watch | ஈரோடு தேர்தல் களம்: வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கொலுசு வழங்கிய அதிமுகவினர் #SunNews | #ADMK | #ErodeEastByPolls pic.twitter.com/FfK22CJIU8
— Sun News (@sunnewstamil) February 20, 2023
எனினும், சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவை ஆதாரமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியிருந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு திமுகவினர் கொடுத்த பிரஷர் குக்கர் வெடித்து பெண் வாக்காளர் படுகாயம்#பீதியில்_ஈரோடுகிழக்கு_மக்கள் pic.twitter.com/jL28FWKhNI
— Gowri Sankar D (@GowriSankarD_) February 22, 2023
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் கொடுத்த குக்கர் வெடித்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர்.
https://twitter.com/PSM21975640/status/1628407373764395009
அதில், “திடீரென வெடித்துச் சிதறியது ஓட்டுக்காகக் கொடுத்த குக்கர்… வெந்துபோனது பெண்ணின் முகம், கை… பீதியில் இலவசம் பெற்ற மக்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய புகைப்படத்தில் ‘தந்தி டிவி’ என இருப்பதைக் காண முடிகிறது. இதனைக் கொண்டு தந்தி டிவியில் ஏதேனும் செய்தி வெளியிடப்பட்டுள்ளதா எனத் தேடினோம். அவர்களது யூடியூப் பக்கத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதில், “கர்நாடகாவில் சட்டப்பேரவை நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பரிசுப் பொருட்கள் விநியோகமும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு, சோமேஷ்வரா காலனி பகுதியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாகச் சமையல் குக்கர்களை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே இலவசமாக வந்த குக்கரில் சமைத்துக் கொண்டிருந்த போது, தீடிர் என வெடித்துச் சிதறியதில் பெண்ணுக்கு தீ காயம் ஏற்பட்டது” எனக் கூறப்பட்டுள்ளது.
Karnataka Assembly Elections: Pressure Cooker Gifted To Voters By Politicians Explodes In Bengaluru.#TNShorts #KarnatakaAssemblyElections pic.twitter.com/D5aDMCB4v8
— TIMES NOW (@TimesNow) February 21, 2023
இதிலிருந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நிகழ்ந்த குக்கர் விபத்தைத் தமிழ்நாட்டில் நடந்தது போல ஒரு தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவது தெரிய வருகிறது.
மேலும் படிக்க : ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டதா ?
இதே போல், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பரவிய போலி செய்திகளின் உண்மைத் தன்மையை யூடர்ன் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க : ‘பிரச்சாரத்திற்கு வராதீர்கள்’ என பாஜகவிடம் அதிமுக கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !
முடிவு :
நம் தேடலில், ஈரோட்டில் ஓட்டுக்காகக் கொடுக்கப்பட்ட குக்கர் வெடித்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் உண்மை அல்ல. அது கர்நாடகா மாநில பெங்களூரில் நடந்தது என்பதை அறிய முடிகிறது.
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.